மேலும் அறிய

RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், மிசா காலம் பற்றி பேசும்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை குறித்து கூறிய கருத்துகள் கடும் சர்ச்சையானது. இதனை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் திமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் விஜயை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் அவரை தரக்குறைவாக விமர்சித்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், மிசா காலம் பற்றி பேசும்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை குறித்து கூறிய கருத்துகள் கடும் சர்ச்சையானது. இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் முதல்வர் விஜயின் ஆணவப்பேச்சைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மா.சுப்பிரமணியன், ஆர்.எஸ்.பாரதி,சேகர்பாபு, மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன், ஆ.ராசா, எழிலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “இந்த கண்டன கூட்டம் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மாண்புகளை மறந்து, மரியாதை இழந்து பேசியுள்ளார். நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தால் அது ஏதோ செய்யும் என கூறுவதைப் போல சட்டமன்றத்திற்கு துரதிஷ்டவசமாக தமிழ்நாடு மக்களால் அனுப்பப்பட்ட விஜய், தன்னுடைய பழைய புத்தியை காட்டும் வகையில் பேசியுள்ளார். திமுகவில் இருக்கும் கடைசி தொண்டனும் கொதித்தெழுந்துள்ளனர். சட்டமன்றத்தில் விஜய் பேசிவிட்டு சென்ற பிறகு எத்தனை தொலைபேசி அழைப்புகள் எனக்கு வந்தது தெரியுமா?.. அதில் பேசியவர்கள் எல்லாரும் கதறி கதறி அழுதார்கள். திமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் அரசியல் பண்பு தெரிந்தவர்கள் கூட முதலமைச்சர் விஜயின் பேச்சை வேதனையோடு பேசினார்கள். இதனை எப்படி தாங்குவது, எத்தனை நாட்களுக்கு தாங்குவது என வயிற்றெரிச்சலோடு சொன்னார்கள். 

விஜயை ஓடுகாலி என சேகர்பாபு சொன்னார். நான் ஓட்ட கால் என சொல்கிறேன். அவரை நேராக ஓடச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த மாதிரி எங்களுக்கும் பேச தெரியும். திமுகவினரை பேச விட்டால் நீ தாங்க மாட்டாய் என சொல்லிக் கொள்கிறேன். மிசாவை பற்றி பேசும் யோக்கியதை விஜய்க்கு அறவே கிடையாது. இன்றைய இளம் தலைமுறையினருக்கு மிசா காலக்கட்டம் பற்றி தெரியாது. எவனோ எழுதிக் கொடுத்ததை விஜய் பேசியுள்ளார். தமிழக அரசின் அதிகாரிகள் எல்லாரும் 60க்கு கீழ் தான் இருக்க வேண்டும். அவர்கள் மிசா காலத்தை நேரடியாக பார்த்தவர்கள் கிடையாது. ஆனால் நான் நேரில் பார்த்துள்ளேன் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து திமுக எம்பி ஆ.ராசா பேசும்போது, முதலமைச்சர் விஜய்க்கு கொழுப்பு என்பது மூளையில் இருக்கிறதா?.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாதா?.. நீ தற்குறியாக இருந்தாலும் ஒரு முதலமைச்சராக உன்னை நான் மதிக்கிறேன். சட்டமன்றத்தில் அநாகரிகமாக விஜய் பேசுகிறார். திமுக ஆட்சியில் நடந்தால் அது சட்டம் ஒழுங்கு பிரச்னை. தவெக ஆட்சியில் நடந்தால் அது தனிநபர் பிரச்னை என சொல்கிறார் என தெரிவித்துள்ளார். 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
TVK:
TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
புதுச்சேரி விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? முதல்வர் ரங்கசாமி ஒரு போன் போட்டால் தீருமா பிரச்சினை?
புதுச்சேரி விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? முதல்வர் ரங்கசாமி ஒரு போன் போட்டால் தீருமா பிரச்சினை?
MK Stalin:
MK Stalin: "6 மாசம் கூட இந்த ஆட்சி நிலைக்காது.. ஆட்சியை அப்புறப்படுத்த உழைக்க வேண்டும்" மு.க.ஸ்டாலின் பேச்சு
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
MK Stalin:
MK Stalin: "6 மாசம் கூட இந்த ஆட்சி நிலைக்காது.. ஆட்சியை அப்புறப்படுத்த உழைக்க வேண்டும்" மு.க.ஸ்டாலின் பேச்சு
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
Embed widget