மேலும் அறிய

Tomato Price Hike: எட்டாக்கனியாய் மாறும் தக்காளி.. செய்வதறியாது திகைத்து நிற்கும் மக்கள்.. தமிழ்நாட்டின் தக்காளி விலை நிலவரம்..

கடந்த சில தினங்களாக தக்காளியின் விலை அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் அனேக மாவட்டங்களில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் தக்காளி விலை நிலவரம்: 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி மொத்த வியாரிகள் விற்பனைக்காக காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும். தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் இருந்து பல ரக காய்கறிகள்  வரும். கோயம்பேடு சந்தையிலிருந்து சிறு மொத்த வியாபாரிகள் தேவையாக காய்கறிகளை வாங்கிச் செல்வார்கள். ஆனால் சில்லறை வியாபாரத்தில் காய்கறிகளின் விலை 20 முதல் 30 ரூபாய் வரை அதிகமாக தான் விற்பனை செய்யப்படும்.

ஜூன் மாதம் 8 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. தென் மேற்கு பருவ மழை கேரளாவில் மட்டுமல்லாமல் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை தரும். பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் அனேக மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் இருக்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் தக்காளியின் விலை:

குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி தக்காளி வரத்து என்பது 1000 முதல் 1100 டன் வரை இருக்கும். ஆனால் தற்போது வரத்து குறைவாக இருக்கும் நிலையில் தினசரி 400 முதல் 500 டன் வரை மட்டுமே வரத்து உள்ளது என வியாபாரிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சென்னையில் இருக்கும் சில்லரை வியாபார கடைகளில் 120 முதல் 130 ரூபாய் வரை தக்காளி விறபனை செய்யப்படுகிறது. அதேபோல் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் கூட தக்காளியில் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கும், சில்லரை கடைகளில் 120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி 120 முதல் 130 ரூபாய் வரையிலும், மதுரையில் 120 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கொடைக்கானல் வாரச் சந்தையில் 150 ரூயாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் அனேக மாவட்டங்களில் தக்காளியில் விலை கிலோ ஒன்றுக்கு 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ரேஷன் கடைகளில் தக்காளி: 

இது ஒருபுறம் இருக்க மக்களின் அவதியை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு தரப்பில் நியாய விலை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது. 82 ரேஷன் கடைகள், 62 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் என 147 கடைகள்மூலம், ஒரு கடைக்கு 100 கிலோ என்ற அடிப்படையில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் 75 சதவீதம், தெலங்கானாவில் 61.16 சதவீதம்.. வெளியான வாக்குப்பதிவு சதவீதம்..!
ஆந்திராவில் 75 சதவீதம், தெலங்கானாவில் 61.16 சதவீதம்.. வெளியான வாக்குப்பதிவு சதவீதம்..!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் 75 சதவீதம், தெலங்கானாவில் 61.16 சதவீதம்.. வெளியான வாக்குப்பதிவு சதவீதம்..!
ஆந்திராவில் 75 சதவீதம், தெலங்கானாவில் 61.16 சதவீதம்.. வெளியான வாக்குப்பதிவு சதவீதம்..!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Embed widget