மேலும் அறிய

Dr Ramadoss : அடுத்த மூவ் என்ன? கூட்டணி குறித்து மௌனம் கலைத்த மருத்துவர் ராமதாஸ்!

பாமக யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக விரைவில் முடிவு செய்வோம் - மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம்: தமிழக மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் தொடங்கியது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கூட்டணி குறித்து மிக முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

வேட்பாளர் நேர்காணல் 

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நேர்காணல் இன்று தொடங்கியுள்ள நிலையில், கூட்டணி குறித்து அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

கூட்டணி குறித்து விரைவில் முடிவு:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சி தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் மற்றும் கூட்டணி குறித்த ஆலோசனைகள் விறுவிறுப்படைந்துள்ளன.

4,109 விருப்ப மனுக்கள்: 3 நாட்கள் நேர்காணல்

பாமக ராமதாஸ் தரப்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து கடந்த ஜனவரி 9-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து மொத்தம் 4,109 பேர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். இந்த மனுதாரர்களுக்கான நேர்காணல் இன்று (ஜனவரி 31) விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் தொடங்கியது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, மற்றும் செயல் தலைவர் காந்திமதி ஆகியோர் முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது.

 இன்றைய நேர்காணல்:

 சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் இன்று விசாரணை நடத்தப்படுகிறது. இந்த நேர்காணல் இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. 

கூட்டணி குறித்து ராமதாஸ் சொன்னது என்ன?

நேர்காணலின் இடையே செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர் ராமதாஸ், அரசியல் வட்டாரத்தில் நிலவும் கூட்டணி குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

 "பாமக யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக விரைவில் முடிவு செய்வோம். கூட்டணி குறித்து சில கட்சிகள் என்னிடம் பேசியுள்ளன; தற்போது பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். தொடர்ந்து பேசுவோம்."

திமுக விமர்சனம் குறித்து:

திமுகவை விமர்சித்து சமீபகாலமாக வெளியாகும் அறிக்கைகள் குறித்துக் கேட்டபோது, "அதில் ஒன்றுமில்லை" எனச் சுருக்கமாகப் பதிலளித்தார்.
 
வெற்றி வாய்ப்பு குறித்து: 

கடந்த காலங்களில் வெற்றி பெற்ற தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, "நம்பிக்கை அடிப்படையில் தான் இந்த உலகமே இயங்குகிறது" எனத் தனது பாணியில் நம்பிக்கையோடு பதிலளித்தார்.
விருப்ப மனு அளித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் நேர்காணலில் நிலவும் உற்சாகத்தைப் பார்க்கும்போது, பாமக இந்தத் தேர்தலில் ஒரு வலுவான கூட்டணியை அமைத்து களம் காணத் தயாராகி வருவது தெளிவாகத் தெரிகிறது.

தலைப்பு செய்திகள்

இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை கைவிடுக: தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை கைவிடுக: தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
நீர்நிலைகளைத் தூர்வார ‘டெட்லைன்’... பருவமழைக்கு முன் பணிகளை முடிக்க ஆட்சியர் கெடு!
நீர்நிலைகளைத் தூர்வார ‘டெட்லைன்’... பருவமழைக்கு முன் பணிகளை முடிக்க ஆட்சியர் கெடு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Embed widget