#WeNeedNorthTN | We Need North TN ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.. ட்ரெண்ட் செய்வது யார்?
ட்விட்டரில் ‘#WENEEDNorthTN’ என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் சிலர் தமிழ்நாடு வட மாநிலங்களை போல ஆக வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை முதல் அலையைவிட மிகவும் வீரியமாக உள்ளது. இதனால் நாள்தோறும் பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. நேற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.46 லட்சமாக இருந்தது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2624-ஆக இருந்தது.
இதில் டெல்லியில் அதிகளவில் உயிரிழப்புகள் பதிவாகி இருந்தன. டெல்லியில் மட்டும் ஒரே நாளில் 359 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்நிலையில் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்ய போதிய இடம் இல்லாததால் தற்போது இருக்கும் இடத்தை மேலும் விரிவுபடுத்தி டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
Some major states should be divided into smaller parts for more effective governance, judiciary & other constitutional offices. Supreme Court too should mull to open up single bench branches in all prominent cities so people do not need to travel to capital. #WeNeedNorthTN
— Nuryanana (@nuryanana_kaush) April 25, 2021
உடல் தகன மையம் இல்லாமல் வெட்டவெளியில் எரிக்கப்படும் உடல்களை உலகமே படம்பிடித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ட்விட்டரில் ‘#WENEEDNorthTN’ என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் சிலர் தமிழ்நாடு வட மாநிலங்களை போல ஆக வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் தமிழ்நாடு சிறியதாக இருந்தால் எளிதாக நிர்வாகம் செய்ய முடியும் என்று பதிவிட்டு வருகின்றனர்.
if TN is broken up into 3 states, there will be good competition among them as to who speaks/writes better #Tamil and so, it is win-win situation for our Language. BTW, #Tasmac should be there in all 3 states with same name it shd be jointly owned by all 3 states. #WeNeedNorthTN
— alakshya (@alakshya2) April 25, 2021
இதற்கு எதிராக பதிவிடுபவர்கள் இதனால் ஏற்படும் ஆபத்தான சூழல் குறித்து பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக ஒருவர் இந்த ட்ரெண்ட் மூலம் தமிழர்களிடம் பிரிவினையை ஏற்படுத்த திட்டம் என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர்,”முதலில் ஒரு அமைப்பு தமிழ்நாட்டை ஆள நினைத்து சாதி வாரியாக பிரிக்க நினைத்து அது முடியாமல் போனது. எனவே தற்போது நிலத்தை வைத்து தமிழ்நாட்டை பிரிக்க நினைக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
Tamil Nadu is one their is no north,east,south,west every one of us speak Tamil... we are united as one unlike North Indians we don't discriminate people based on caste or religion #WeNeedNorthTN #WeNeedNorthTN
— Sridhar kp🇮🇳 (@SrIdHAr_Uzumaki) April 25, 2021
மேலும் சிலர் அரசியல் நோக்கங்களுக்காக இது ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. ஒரே ஒரு இந்தியா தான். அதேபோல் ஒரே ஒரு தமிழ்நாடு தான் என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
To that comalis
— coolgle (@brain_technique) April 25, 2021
who trends #WeNeedNorthTN pic.twitter.com/3YRWOVtDOo
How Britishers influenced through East Indian Company by dividing us, the same way current politicians trying to divide us.
— Silambarasan Arulmozhi (@silambuarul) April 25, 2021
#WeNeedNorthTN
#WeNeedNorthTNiam very sad to see this hashtag #WeNeedNorthTN. we all indians are fighting for unity, some dirty politicians want divide and rule. we indians will not allow that dirty minded things. There is no north, south etc.. only one india, one tamilnadu. #unitytamil
— ARUN J S (@_JS__7) April 25, 2021
Nonsense, #WeNeedNorthTN Just because a group wishes to rule a state, they will resort to divide and rule. First it was on the lines of caste, then religion now geopolitics. No one speaks about living in harmony & peace. Tamilnadu is one & united, no North or South.
— C S Laxme (@cslaxme) April 25, 2021
உடல் தகன மையம் இல்லாமல் வெட்டவெளியில் எரிக்கப்படும் உடல்களை உலகமே படம்பிடித்துக்கொண்டிருக்கிறது. வெட்டவெளியில் எந்த உதவியும் இல்லாமல் ப்ளாட்பார்மில் மக்கள் அவதிப்படும் காட்சிகளும், தெருவில் அமர்ந்து ஆக்சிஜனுக்காக கதறும் நிலையும் இருக்கும் வடநாட்டைப் போல தமிழ்நாடு ஆகவேண்டும் என்று இந்த பெருந்தொற்றுக் காலத்திலும் ட்ரெண்ட் செய்பவர்கள் ஆபத்தானவர்கள் என பலரும் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். இந்த நிலையில், தமிழகம் வடமாநிலத்தைப் போல் ஆகவேண்டும் என்னும் ட்விட்டர் ட்ரெண்டை பரப்புவர்கள் எவ்வளவு ஆபத்தான சிந்தனையை விதைக்கிறார்கள் என்று ட்விட்டரின் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.