மேலும் அறிய

கரூரில் மனுநீதி நாள் முகாமில் 584 பயணிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - ஆட்சியர் வழங்கினார்

பள்ளி கல்வித்துறையில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், காலை உணவு திட்டம் நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் வருகிறது கிருஷ்ணாபுரம் வட்டாரத்தில் மட்டும் இப்பொழுது அமல்படுத்தப்பட்டது.

மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர்  584 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.82.44 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கரூர் மாவட்டம், புகழுர்  வட்டம், தென்னிலை மேல்பாகம் ஊராட்சி கூனம்பட்டி கிராமத்தில்  நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர்   பிரபுசங்கர் 584 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு துறைகளின் சார்பாக ரூ.82.44 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.இளங்கோ அவர்கள் முன்னிலை வகித்தார்.

கரூரில் மனுநீதி நாள் முகாமில் 584 பயணிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - ஆட்சியர் வழங்கினார்

இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைகிணங்க, மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அனைத்துத்தரப்பு மக்களையும் பயன்பெறச் செய்து வருகிறார்கள். பொதுமக்களின் கோரிக்கைகளையும், அரசின் நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டத்தினை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று, பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில், இன்றைய தினம் புகழுர்  வட்டம், தென்னிலை மேல்பாகம் ஊராட்சி கூனம்பட்டி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்,  நடைபெற்றுள்ளது.  கிராமத்தில் வசிக்கின்ற பொதுமக்களின் வீடுகளுக்கு, அலுவலர்கள் குழுவாகச் சென்று, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று தகுதியான நபர்களுக்கு அதன் பயன்களை கிடைக்கப்பெறச் செய்யும் வகையிலும், அனைத்து அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும் இம்முகாம் நடத்தப்படுகிறது. நம்முடைய ஊராட்சியில் இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை பல்வேறு மனுக்கள் பெறப்பட்டிருக்கிறது அந்த பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றைய தினம் 584 பயனாளிகளுக்கு  ரூ.82,44,023 இலட்சம் மதிப்பீட்டில் அரசு  நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊரு நாங்கள் வருவதற்கு முன்பே அடையாளம் கண்டு கிட்டத்தட்ட ஒரு  கோடியே 80 இலட்சம் ரூபாய் காண நிர்வாக அனுமதியை வழங்கி உள்ளோம். இதன் மூலம் இந்த ஊராட்சிக்கு தேவையான சிமெண்ட் சாலை, மேல்நிலை  நீர்த்தேக்கதொட்டி, பைப் லைன், மின் மோட்டார் ஒன்றை பள்ளிக்கு வழங்கியுள்ளோம். மேலும், சமையலறை கட்டுதல், பாலம் அமைத்தல் இது போன்ற பணிகளுக்கு மொத்தமாக ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பிலான நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளோம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதுபோன்றுதான் மக்கள் தொடர்பு முகாமில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஒப்புதல் பெற்று இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தக்கூடிய பல்வேறு சிறப்பு திட்டங்கள் குறித்து பல்வேறு அதிகாரிகள் இங்கு விளக்கினார்கள் அந்த திட்டத்தினுடைய நோக்கம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் அவருடைய தாக்கம் பார்த்தீர்கள் என்றால் மிக  சிறப்பான தாக்கம்

கரூரில் மனுநீதி நாள் முகாமில் 584 பயணிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - ஆட்சியர் வழங்கினார்

பள்ளி கல்வித்துறையில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், காலை உணவு திட்டம் நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் வருகிறது கிருஷ்ணாபுரம் வட்டாரத்தில் மட்டும் இப்பொழுது அமல்படுத்தப்பட்டது. வருங்காலத்தில் அனைத்து ஊர்களிலும் ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் முலம்  குழந்தைகளின் ஆர்வம் அதிகரித்துள்ளது.   இது மக்களே தெரியும். மருத்துவம் பல விஷயங்களில் நம்முடைய மாநில அரசினுடைய திட்டங்கள் மக்களை சென்று அவர்களுடைய வாழ்க்கையை தொடுவதற்கான வலிமை கொண்டுள்ள அதே வழியில் நம்முடைய மாவட்டத்தில் நம்முடைய மிகச் சிறந்த மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்      அவர்கள் சிறப்பான திட்டங்கள் பொக்கிஷம் என்கிற திட்டம் பிரசவ காலத்தில் இருக்க கூடிய பெண்களுக்குக்கான ஊட்டச்சத்து   பெட்டகம்  அதே போல சமீபத்தில் ஆங்கில நண்பன் மூன்று நாட்களுக்கு முன்னர் கரூரில் அரசு பள்ளி மாணவி அவர்கள் பேசிய ஆங்கிலத்தில் காரணம் நம்முடைய மாவட்டத்தில் மட்டுமே 12 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு ஒரு சிறப்பு ஆங்கிலப் பயிற்சி எடுத்து வருகிறோம் அதேபோல உதிரம் உயர்த்துவோம்  9 இருந்து  12 வகுப்பு படிக்கக்கூடிய மாணவிகளுக்கு உடலில் எவ்வளவு ஹீமோகுளோபின் எவ்வளவு உள்ளது என்பதனை கண்டறிந்து அதற்கான மருத்துவ சிகிட்சைகளும் செய்யப்பட்டுள்ளன இந்தியாவிலேயே நம்முடைய மாநிலத்தில் அமைச்சர் அவர்களால் செய்யப்படக்கூடிய திட்டங்கள் இரத்த சோகை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளோம் உங்களுடைய தேவைகளை அறிந்து அவற்றிற்கான தேவைகளை பூர்த்தி செய்வதில்  நமது மாவட்டம் சிறப்பாக செயல்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபுசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

.

இம்முகாமில் வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 48 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களும் 6 பயனாளிகளுக்கு நத்தம் பட்ட மாறுதல் 10 பயனளிகளுக்கு இணையவழி பட்டா மாற்றமும் 130 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா நகலும் மூன்று பயனாளிகளுக்கு உட்பிரிவு களுக்கான ஆணையும் 53 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையில் 11 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.198000 உதவி தொகைக்கான ஆனைகளையும் 103 பயனளிகளுக்கு ரூ12,36,000 மதிப்பீட்டில் முதியோர் உதவி தொகைக்கான ஆணைகளையும் 41 பயனாளிகளுக்கு ரூ492000 மதிப்பீட்டில் விதவை உதவி தொகைக்கான ஆணையையும் 3 பயனளிகளுக்கு ரூ36,000 மதிப்பீட்டில் கணவரால் கைவிடப்பட்டவற்கான உதவித் தொகைகளையும், 47 பயனாளிகளுக்கு ரூ24,30,000 மதிப்பீட்டில் முதலமைச்சர் வாகன விபத்து நிவாரண நிதி ஆணைகளையும் சுகாதாரத் துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ14,00 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் தொழிலாளர் நலத் துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.64,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 9 பயனளிகளுக்கு ரூ.62 500 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு 293929 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் மகளிர் திட்டம் சார்பில் 52 பயனாளிகளுக்கு ரூ.1195000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட  முன்னோடி வங்கி சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1600000 மதிப்பீட்டில் வங்கி கடன் உதவி ஆணைகளையும் தோட்டக்கலைத் துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.349046 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 1 பயனளிகளுக்கு ரூ.273548 மதிப்பீட்டில் வேளாண் உபகரணங்கள் என மொத்த 584 பயனாளிகளுக்கு ரூ.82,44,023 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்கள் .

கரூரில் மனுநீதி நாள் முகாமில் 584 பயணிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - ஆட்சியர் வழங்கினார்

தொடர்ந்து 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில்  பதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 20 பயனாளிக்கு கற்போர் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள். முன்னதாக, வேளாண்மைத்துறை, பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறை ஆகியத் துறைகள் மூலம் பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். 

இந்நிகழ்வின்போது,  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.வாணிஈஸ்வரி,  மகளிர் திட்ட இயக்குநர் திரு.சீனிவாசன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.கார்த்திக், தனித் துணை ஆட்சியர் திரு.சைபுதீன், வருவாய் கோட்டாட்சியர் செல்வி ரூபினா, ஒன்றிய குழு உறுப்பினர் திரு.நவீன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.சொர்ணலதா, புகழுர் வட்டாட்சியர் திரு.முருகன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Annamalai: அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Embed widget