Weather Update: கனமழை எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை! வானிலை அப்டேட் என்ன ?
Weather Forecast Chengalpattu: "இன்று (24-10-2025) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது"

Today Rain Alert In Kanchipuram: "பருவமழை தொடங்கியுள்ள நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்றைய வானிலை நிலவரம் குறித்து தெரிந்து கொள்வோம்"
தமிழ்நாட்டில் பருவமழை - Tamilnadu Weather Forecast
தமிழ்நாட்டில் பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று தர்மபுரி மாவட்டம் அரூரில் பதினொரு சென்டிமீட்டர் மழை, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயில் ஆகிய பகுதிகளில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று திருத்தணி, விழுப்புரம் அவலூர்பேட்டை, நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 8 சென்டிமீட்டர் மழை வரை பதிவாகி இருக்கிறது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், இன்று புதியதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக வடமேற்கு திசையில் நகர்ந்து உள்ளது. இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இன்று நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தென்கிழக்கு மற்றும் அதன் ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தாழ்வு மண்டலம் உருவாகிய பிறகு அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வலுவடைய கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம் வானிலை நிலவரம் என்ன ? Kanchipuram Weather Forecast Today
காஞ்சிபுரம் பொருத்தவரை இன்று (24-10-2025) மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை 8 மணியிலிருந்து 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்திலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சிபுரத்தில் ஈரப்பதம் 88 சதவீதம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு வானிலை நிலவரம் என்ன ? Chengalpattu Weather Forecast Today
செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை இன்று (24-10-2025) பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், செய்யூர், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மழை காரணமாக தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் வானிலை நிலவரம் என்ன ? Thiruvallur Weather Forecast Today
திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ராணிப்பேட்டை மாவட்டத்திலும் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் பூண்டி ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















