ஸ்டாலின் திட்டங்களை தெய்வத்துணையுடன் தர்மத்தின் வழிநின்று வீழ்த்துவோம்- அர்ச்சகர்கள் சமூக நல சங்கம்
’’மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியும், அவரைத் தொடர்ந்து அவரது மகன் மு.க.ஸ்டாலினும் என்ன காரணத்துக்காகவோ இவர்கள் ஆதரிக்கும் வேற்று மதக்காரர்களுக்குத் துணை போகும் விதமாக ஆட்சி நடத்துகின்றனர்’’
இந்துமத ஆலயங்களையும், இந்து மதத்தையும் ஆழிக்க முயலும் மு.க.ஸ்டாலின் திட்டங்களை தெய்வத்தின் துணையுடன், தர்மத்தின் வழி நின்று சட்டத்தின் மூலம் வீழ்த்துவோம் என்று தமிழ்நாடு அர்ச்சகர்கள் சமூக நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் எஸ். அருணாசலம், மாநிலப் பொதுச்செயலாளா புலவர் இரா.பாலசடாட்சரம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார். இந்துமத அலயங்களில் அந்தந்த ஆலயங்களின் ஆகம விதிப்படியும், தொன்று தொட்டு இருந்துவரும் பழக்க வழக்கப்படியும் தான் தினப்படி பூஜை முதல் கும்பாபிஷேகம் வரை நடந்து வருகின்றன.
அறுபத்தி நான்கு நாயன்மார்களில் அனைத்து ஜாதியினரும் உள்ளனர். அவர்களைக் கடவுளாக வைத்துதான் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் தினமும் பூஜை செய்து வருகின்றனர். அங்கு ஜாதிக்கு இடமில்லை. இதேபோல்தான் வைணவ ஆலயங்களும் இயங்கிவருகின்றன. மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியும், அவரைத் தொடர்ந்து அவரது மகன் மு.க.ஸ்டாலினும் என்ன காரணத்துக்காகவோ இவர்கள் ஆதரிக்கும் வேற்று மதக்காரர்களுக்குத் துணை போகும் விதமாக ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு இந்து மதத்தின் நிலைக்கலனாக உள்ள ஆலயங்களையும், இந்து மதத்தையும் அழிக்கவேண்டும் என்று திட்டமிட்டு. கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.
1967இல் திமுக. ஆட்சிக்கு வந்தது முதல் 1984 ஆம் ஆண்டு வரை 17 ஆண்டுகள் அர்ச்சகர்களுக்கு சம்பளமே கொடுக்கவில்லை. பல ஆண்டுகளாக அரிசி முதலிய படித்தர சாமான்களும் வழங்கப்படவில்லை. இதனால் பசி, பஞ்சம், பட்டினி என்ற வேதனையில் அர்ச்சகர் சமூகமே மூழ்கித் தவித்தது. பல அர்ச்சகர்கள் பிழைப்பு தேடி வெளியிடங்களுக்குச் சென்றனர். பல அர்ச்சகர்கள் பெரிய கோவில்களுக்கு உதவிக்குச் சென்று அதன் மூலம் வரும் சொற்ப வருவாயைக் கொண்டு வந்து அந்த பணத்தில் அரிசி வாங்கி கோவில் பூஜையை செய்துவிட்டு ஓரிரு வேளை கால்வயிறும் அரைவயிறும் பூஜையை நிறத்தவில்லை. உண்டு சொல்லிமாளாது.
தி.மு.க ஆட்சி அகன்று அதிமுக ஆட்சி ஏற்பட்டிருந்தாலும், இந்த நிலையை அநநிலையத் துறை அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லாமல் மறைத்துவிட்டனர். எந்த வசதியும் இல்லாததால் அர்ச்சகர்கள் 1984இல் திருவிடைமருதூர் வட்டத்தில் 12 கோவில்களைப் பூட்டிவிட்டனர். அதை அறிந்த நாங்கள் அதில் தலையீட்டு கோவிலைத் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இனி எந்தக்காலத்திலும் இறை பணியில் தடை ஏற்படக்கூடாது, அர்ச்சகர் உள்ளிட்ட ஆலய எற்பாடு தடை ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்க்கப்பட வேண்டும், அதற்கான பணிகளைச் செய்வதற்காக தமிழ்நாடு அர்ச்சகர்கள் சமூக நலச் ஆரம்பித்து சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியர்கள் அனைவரையம் சங்கத்தில் சேர்துவிட்டு 1-4-1985 அன்று முதல்வர் எம்.ஜி.ஆரை சந்தித்து கோரிக்கைகளை சொன்னோம்.
அதை கேட்ட அவர் நான் பார்த்து செய்கிறேன் என்றார். சொன்னபடியே செய்தார். 21.7.1985 இல் தஞ்சையில் விழா நடத்தி சம்பள பாக்கியை வழங்கினார். முதல்வர் எம்ஜிஆரும், அடுத்து வந்த முதல்வர் ஜெயலலிதாவும் அர்ச்சகர் சமுதாயத்திற்கு வாழ்வு தந்தார்கள். சுமார் 50 ரூபாய் வரை சம்பளம் பெற்ற அர்ச்சகர்கள் அதிகபட்சமாக மாதம் 17 ஆயிரம் வரை சம்பளம் பெறும் சூழ்நிலையும், முறையாக பூஜை நடைபெறவும் வழிவகுத்தனர்.
மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக, முதல்வர் முக.ஸ்டாலினை ஆதரிக்கும் வேற்று மதத்தினருக்கு துணை போகும் விதமாக ஆட்சி அதிகாரத்தை வைத்து கொண்டு இந்து மதத்தின் நிலைகலனாக உள்ள ஆலயங்களையும், இந்து மதத்தையும் ஆழிக்க முயலும், திமுக அரசையும் முக.ஸ்டாலின் திட்டங்களை தெய்வத்துணையுடன் தர்மத்தின் வழிநின்று வீழ்த்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.