Vilathikulam Case: 2 கொலை, 3 பாலியல் வன்கொடுமை, 33 வழக்குகள்- விளாத்திகுளம் குற்றவாளியின் கொடூர, தந்திர பின்னணி!
விளாத்திகுளம் மாணவி கொலை: கொடூர குற்றவாளி தர்ம முனீஸ்வரன் கைது! அதிர்ச்சி தரும் பின்னணி & அடுத்தடுத்து நடந்த கொடூரங்கள்!

விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரன் என்னும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிபந்தனை ஜாமீனில் உள்ள குற்றவாளி
இயற்கை உபாதைக்காக காட்டுப் பக்கம் சென்ற மாணவியைக் கதறக் கதற பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த தர்ம முனீஸ்வரன், ஏற்கெனவே ஒரு வழக்கில் தண்டனை பெற்று நிபந்தனை ஜாமீனில் உள்ள ஒரு குற்றவாளி ஆவார்.
காயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் மீது 33 வழக்குகள் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதேபோல 3 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 2 பேரைக் கொலையும் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறார். குறிப்பாக 2020ஆம் ஆண்டு 60 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
இதுதொடர்பாக 2022ஆம் ஆண்டு தர்ம முனீஸ்வரன் ஆயுள் தண்டனை பெற்ற நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கில், நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார்.
எட்டயபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்து இடச் செல்லும்போதுதான், தர்ம முனீஸ்வரன் மாணவி தனியாகச் செல்வதைக் கண்டு பின்தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். காற்றாலை அருகே மது அருந்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
குடும்பத்தினர் யாரும் இல்லை
தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தர்ம முனீஸ்வரனுக்கு குடும்பத்தினர் யாரும் இல்லை. வீடுகளுக்குள் புகுந்து திருடுவது, பைக் திருட்டு, யாரையாவது போன்ற குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். காவலர்களைத் தாக்கிய வழக்குகளும் இவர் மீது உள்ளன.
கொடும் குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு, காவல் துறையினரின் விசாரணை வளையத்தில் இருந்து தப்பிக்க, சிறு சிறு வழக்குகளில் வேண்டுமென்றே மாட்டிக் கொள்வது தர்ம முனீஸ்வரனின் வழக்கமாக இருந்துள்ளது.
தந்திரமான குற்றவாளி
2020ஆம் ஆண்டு மூதாட்டி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தப்பிக்கவும், காவலரை வேண்டுமென்ற சண்டையிட்டுத் தாக்கி, ராமநாதபுரம் சிறையில் தர்ம முனீஸ்வரன் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. தர்ம முனீஸ்வரன் குறித்த விவரங்கள் மேலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















