மேலும் அறிய

Vikravandi bypoll 2024: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்களித்தார் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா

திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 42 வது வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  Vikravandi bypoll

விழுப்புரம் : விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் Vikravandi bypoll வாக்குபதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 42 வது வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில் “எனது வாக்கினை பதிவு செய்துள்ளேன். முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்புகிறேன். விக்கிரவாண்டி தொகுதி மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி, கடந்த 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ஆம் தேதி காலமான நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் ஜூலை 10 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த வெளியூர்களில் பணிபுரியும் நபர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள்

விக்கிரவாண்டி தொகுதியில்  1 லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர் 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் களத்தில் 29 வேட்பாளர்கள் :

இதைத் தொடர்ந்து ஜூன் 14 முதல் 21-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கலும், 24ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 26 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இத்தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் பொ. அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

276 வாக்குச்சாவடி மையங்கள் 

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றம் வாக்குப்பதிவு நிலை அலுவலர்களுக்கு பணி ஆணை ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் (Third Level Randomization )  நடத்தப்பட்டது. 3 மிகவும் பதற்றமான வாக்கு சாவடிகள் , 41 பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ளன.  220 CRPF உட்பட 2651 காவல் ஆளிநர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பணியில் 1355 அலுவலர்கள் : 

276 வாக்குச்சாவடி மையங்களில், 331 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் -1, 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் - 2, 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் -3, 31 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் - 4 என மொத்தம் 1355 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்புதிவு நிலை அலுவலர்களுக்கும், 44 பதட்டமான மற்றும் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள 53 நுண்பார்வையாளர்களுக்கும் பணி ஆணை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தொடரும் போஸ்டர் அரசியல்.. Am I Next ? பின்னணி என்ன ?
Anna University : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தொடரும் போஸ்டர் அரசியல்.. Am I Next ? பின்னணி என்ன ?
Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்
Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்
டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்
டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்
இன்ஸ்டாகிராமில் பழக்கம்: தைரியமாக வீடு புகுந்த வாலிபர்! பின்னர் நடந்தது என்ன?
இன்ஸ்டாகிராமில் பழக்கம்: தைரியமாக வீடு புகுந்த வாலிபர்! பின்னர் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தொடரும் போஸ்டர் அரசியல்.. Am I Next ? பின்னணி என்ன ?
Anna University : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தொடரும் போஸ்டர் அரசியல்.. Am I Next ? பின்னணி என்ன ?
Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்
Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்
டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்
டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்
இன்ஸ்டாகிராமில் பழக்கம்: தைரியமாக வீடு புகுந்த வாலிபர்! பின்னர் நடந்தது என்ன?
இன்ஸ்டாகிராமில் பழக்கம்: தைரியமாக வீடு புகுந்த வாலிபர்! பின்னர் நடந்தது என்ன?
Watch Video: சாலையில் கட்டி புரண்டு, முடியை பிடித்து அடித்துக்கொண்ட பள்ளி மாணவிகள் - ஒரே நபரை காதலித்ததால் விபரீதம்
Watch Video: சாலையில் கட்டி புரண்டு, முடியை பிடித்து அடித்துக்கொண்ட பள்ளி மாணவிகள் - ஒரே நபரை காதலித்ததால் விபரீதம்
USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
Embed widget