மேலும் அறிய

Vijayakanth Death: "தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு" - விஜயகாந்த் மறைவுக்கு இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் இரங்கல்

Vijayakanth Death: 'புரட்சிக் கலைஞர்' என்றும், 'கேப்டன்' என்றும் தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட அன்புச் சகோதரர் திரு. விஜயகாந்த் அவர்கள், தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் ஒருங்கே பெற்றவர்,

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் (Vijayakanth) உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான திரு.விஜயகாந்த அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய திருமதி பிரேமலதா விஜயகாந்த் , குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ள, மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் திரு.விஜயகாந்த் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார். 

ஓ. பன்னீர்செல்வம் 

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழ்த் திரைவானில் கொடிகட்டி பறந்தவரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனருமான அன்புச் சகோதரர் திரு. விஜயகாந்த் (Vijayakanth) அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

'புரட்சிக் கலைஞர்' என்றும், 'கேப்டன்' என்றும் தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட அன்புச் சகோதரர் திரு. விஜயகாந்த் அவர்கள், தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் ஒருங்கே பெற்றவர், சாதி, மத பேதமின்றி ஏழையெளிய மக்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் பல நிகழ்ச்சிகள்மூலம் சங்கத்தின் கடனை அடைத்தவர் திரு. விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டம் ஒரு இருட்டறை, ரமணா, வைதேகி காத்திருந்தாள், ஊமை விழிகள், அம்மன் கோயில் கிழக்காலே, கேப்டன் பிரபாகரன், சின்ட் கவுண்டர் போன்ற வெற்றிபடங்கள் மூலம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர். கலைமாமணி உட்பட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர். தனியாக ஒரு கட்சியைத் துவக்கி, சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்த பெருமை இவருக்கு உண்டு. திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் திரு. விஜயகாந்த் அவர்கள். அவருடன் அரசியல் ரீதியாக நெருங்கிப் பழகிய அனுபவம் எனக்கு உண்டு. இவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. இவரது இழப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகும்.

திரு. விஜயகாந்த் அவர்கள் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரை உடனிருந்து கண் இமை போல் காத்தவர் அவரது மனைவி அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் என்பதை இந்தத் தருணத்தில் நினைவுகூர்கிறேன்.

அன்புச் சகோதரர் திரு. விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்திற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

டிடிவி தினகரன் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், “திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தேமுதிக தலைவர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்ததோடு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு ஆகும் இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கே எனும் முழக்கத்தை முன்னிறுத்தி நடிகராக, நடிகர் சங்கத்தலைவராக, அரசியல்வாதியாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, ஏழை, எளிய மக்களுக்கு உதவும் மனிதாபிமானம் கொண்டவராக கேப்டன் அவர்கள் ஆற்றிய பணிகள் என்றென்றும் தமிழக மக்கள் மனதில் நிலைத்திருக்கும். தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் அதீத பற்று கொண்டிருந்த கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என சோகத்துடன் பதிவிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget