News Today Live | புதிய கட்சி தொடங்குகிறார் முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்..
News Today Live Updates: முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்!
LIVE
Background
News Today Live Updates:
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், வேலுமணி, வீரமணியைத் தொடர்ந்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்கள், அவரின் உறவினர்கள், ஆதரவாளர்கள் எனத் தமிழகம் முழுவதும் சுமார் 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், ரொக்கப்பணம், நகைகள், சொத்து ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 2016-21 காலகட்டத்திற்குள் தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும், தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் பெயர்களிலும் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடி வரையிலும் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பேரில் அக்டோபர் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை உட்படத் தமிழகம் முழுவதுமே நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், ரூ.23,85,700 ரொக்கப்பணம், 4.87 கிலோ தங்க நகைகள்,136 கன ரக வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், 19 ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
Breaking News: புதிய கட்சி தொடங்குகிறார் முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
புதிய கட்சி தொடங்குகிறார் முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங். பாஜக விவசாயிகள் பிரச்சனையில் தீர்வு காண முன்வருவதாக இருந்தால், 2022 மாநில தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது
முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்
முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை ஆலந்தூரில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் அக்டோபர் 25-ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது