மேலும் அறிய

Actor Vijay: 2026 தேர்தலை குறி வைக்கிறாரா விஜய்...! களத்தில் குதிக்க காத்திருக்கும் ரசிகர்கள்..! வெளியே வந்த முக்கிய ஆவணம்..!

"தொகுதி ரீதியான தகவல்களை விஜய் மக்கள் இயக்கம் திரட்ட துவங்கி இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது"

நடிகர்கள் - அரசியல்
 
தமிழ்நாட்டில் கதாநாயகராக நடிக்கும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும், தனி ரசிகர் மன்றம் இருக்கிறது. ரசிகர் மன்றம் மூலம் நடிகர்கள் தங்கள் படங்களை பிரபலப்படுத்துவது மட்டுமில்லாமல், நற்பணிகளும் செய்து வருகின்றனர். சில சமயங்களில் பிரபல நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பினால், இந்த ரசிகர் மன்றங்களை அரசியல் இயக்கமாகவும் மாற்றிக் கொள்கின்றனர்.

Actor Vijay: 2026 தேர்தலை குறி வைக்கிறாரா விஜய்...! களத்தில் குதிக்க காத்திருக்கும் ரசிகர்கள்..! வெளியே வந்த முக்கிய ஆவணம்..!
 
தேர்தல் வெற்றி
 
அந்த வகையில், நடிகர் விஜய், "விஜய் மக்கள் இயக்கம்" என்ற பெயரில் ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், புஸ்சி ஆனந்த் இருந்து வருகிறார். ஒருங்கிணைப்பு கூட்டங்கள் உள்ளிட்டவற்றை, அவர் ஏற்பாடு செய்து வருகிறார். இந்நிலையில்  9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர் மன்றத் தேர்தலில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை, உள்ளாட்சி பிரதிநிதி தேர்தலில் போட்டியிட, நடிகர் விஜய் அனுமதி அளித்தார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றனர்.
 
Thalapathy vijay vizhiyagam  app lauch by  vijay makkal iyakkam TNN Actor vijay: தொடர்ந்து மக்களை நோக்கி நகரும் விஜய்..! மாஸ்டர் பிளான் போடுகிறாரா வாரிசு..?
 
அரசியல் பரபரப்பு
 
வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட பொறுப்பாளர்களை விஜய் நேரடியாக அழைத்து, பாராட்டு தெரிவித்தது மட்டுமில்லாமல் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு கிளப்பி இருந்தது. தொடர்ந்து, விஜய் விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். 
 
ரசிகர்களை சந்தித்த விஜய்
 
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் செங்கல்பட்டு, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்டிருக்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விஜய் மக்கள் இயக்க தொண்டர்களை சந்தித்த விஜய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதேபோல் தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்க குருதியகம், உள்ளிட்ட செயலிகளை வெளியிட்டு மக்கள் பணியில் ஈடுபடுமாறு தங்கள் ரசிகர்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார். 
Actor Vijay: 2026 தேர்தலை குறி வைக்கிறாரா விஜய்...! களத்தில் குதிக்க காத்திருக்கும் ரசிகர்கள்..! வெளியே வந்த முக்கிய ஆவணம்..!
 
புதிய அறிவிப்பு
 
விஜய் மக்கள் இயக்கத்தின், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மன்றங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் நமது மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள், நகரம், ஒன்றியம், பகுதி மற்றும் கிளை மன்ற நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள உறுதி செய்து அதற்கு தேவையான தகுந்த இடத்தினை ஏற்பாடு செய்ய வேண்டும்.
 
தயார் நிலையில் இருங்கள்
 
இத்துடன் அனுப்பிய படிவத்தினை தாங்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்டம், அணி, நகரம், ஒன்றியம், பகுதி மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு படிவத்தினை அளித்து பூர்த்தி செய்து அனைத்தையும் 15 நாட்களுக்குள் தயார் நிலையில் வைத்திருக்கவும். தங்கள் மாவட்டத்தின் ஆலோசனை கூட்டத்தில் நான் கலந்து கொள்ளும்போது என்னிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் தேதி தளபதியின் அனுமதி பெற்று விரைவில் அறிவிக்கப்படும். ஆகவே அனைவரும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தகவல்களை குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பகிரக்கூடாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
actor vijay is meeting 3 district administrators of  vijay makkal iyakkam Vijay Meets Fans : மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் விஜய்...! விஜயின் மாஸ்டர் பிளான்தான் என்ன? முக்கியத் தகவல்கள் என்ன?
 
அரசியல் நகர்வுக்கான சமிக்கை
 
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ள படிவத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. அந்த படிவத்தில், தொகுதியின் பெயர், வாக்காளர்களின் எண்ணிக்கை, ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள், கடந்த 5 தேர்தல்களில் தங்களது தொகுதிகளில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் விவரங்கள், தொகுதியில் இருக்கும் 10 முக்கிய பகுதிகள், தொகுதியில் இருக்கும் முக்கிய பிரமுகர்களின் பெயர்கள், மொத்த பூத் எண்ணிக்கை, தொகுதியில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை, எத்தனை வார்டுகளில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஒரு அரசியல் கட்சிக்கு தேவையான தகவல்கள் அனைத்தும் அந்த படிவத்தில் கேட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவது உறுதியாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த தேர்தலிலேயே அரசியலுக்கு விஜய் வரவேண்டும் என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
PMK Protest: திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்
திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்
Embed widget