மேலும் அறிய

அம்பேத்கருக்கு ஆசிரியரா? அப்படி ஒரு ஆளே இல்லை: A படம் இசை வெளியீட்டு விழாவில் திருமா பரபரப்பு பேச்சு!

”A படம் என்பது உரையாடலை தொடங்கி வைக்கிறது. Awareness என்பதன் சுருக்கெழுத்தாக A என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். அம்பேத்கரின் பெயர் பற்றி திரித்து கூறப்பட்டுள்ளது" - திருமாவளவன் எம்.பி

A படம் திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவானது சென்னை, வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன், நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

அம்பேத்கரை வரலாற்றை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை மாங்காடு அம்மன் மூவிஸ், ராஜகணபதி தயாரித்து,  ஹீரோவாக நடித்துள்ளார். கேஸ்லெஸ் சிவா.கோ இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பேசியபோது, "இந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது என் மனதிற்கு பல குழப்பங்கள் இருந்தன. காரணம் படத்தின் பெயர். இப்போது ஒரு கருத்தை சொல்ல நினைத்தால் கூட அதை இது போன்று விளம்பரப்படுத்தினால் மட்டுமே பார்க்கிறார்கள்.

படத்தில் அம்பேத்கர் வேடமணிந்து சிறிய சஞ்சலம் கூட இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார். கூட இருப்பவர்களே காந்தியை ஒருமையில் பேசுகின்றனர். பாதுகாப்பு இல்லாத மாநிலம் என்று சொல்கிறார்கள். நான் ஒரு படம் பண்ணிருக்கிறேன். ’Are you Ok Baby’ என்ற விஜய் சேதுபதியின் வசனத்தை வைத்து அந்தப் படத்திற்கு பெயர் வைத்து எடுத்துள்ளேன். விரைவில் அதைப்பற்றிய அடுத்தக்கட்ட அறிவிப்பு வரும்.

ப்ளூ சட்டை மாறன் நடித்த ஆண்டி இந்தியன் திரைப்படம் மிகவும் நன்றாக இருந்தது. அவருக்கும் இதே போன்று சென்சார் ஆகாமலேயே இருந்தது. அவரும் எங்கெங்கோ சென்று அதை வாங்கினார். கண்டிப்பாக உங்களுக்கு சென்சார் கிடைக்கும்” எனப் பேசினார்.

தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:

காஸ்ட்லஸ் சிவா இந்தப் படத்துக்கு ஏன் இந்தப் பெயரை வைத்தோம் என்பதை விளக்கியிருக்கிறார். Awareness என்பதன் சுருக்கெழுத்தாக A என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்கள்.

இந்தப் படத்தின் முன்னோட்ட காட்சியை நாம் அனைவரும் பார்த்தோம். பல இடங்களில் பல திரைப்படங்களில் காந்தி படங்கள் இருப்பது போல், அம்பேத்கரின் படங்களும் இருக்கும்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை காட்டுவதற்காக அம்பேத்கரின் படங்கள் அந்தந்த வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும். ஒரு சமுதாயப் பிரிவை சார்ந்தவர்களுக்கு மட்டும் அவர் தலைவரா என்று கேட்டால் அப்படியில்லை.

லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் சொன்னார், ஒரு நபரைப் பற்றி விமர்சனப்படுத்தாமல், ஒரு கருத்தியலை பற்றி விவாதிக்கும் போது அதனால் மோதல்கள் வராது என்று. ஆனால் சமீப காலமாகவே கருத்தியல் மோதல்கள் தான் அதிகம். வரலாறு பதிவான காலத்திலிருந்து கருத்தியல் இடையே நடக்கும் யுத்தம் தான்.

மனித நேயத்தை போற்றுவோம். அநீதிக்கு குரல் கொடுப்போம், அமைதி வேண்டும் என்று சொல்லுவது, அதுதான் இடது சாரி அரசியல். இடது சாரி அரசியலின் நோக்கமே அமைதி காண்பது தான்.

பிஜேபி ஒரு பகை கட்சி கிடையாது, சாதி பகை கிடையாது, ஒரு தனி மனித பகை கிடையாது. ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் இது மூன்றும் தான் மனித குலத்தின் பகை. இந்த மூன்று தான் வெவ்வேறு வடிவங்களில் பகைமைகளாக சுற்றி வருகிறது. வலுவுள்ளவர்கள் ஆதிக்கம் செய்வார்கள், வல்லவன் வகுத்தது நீதி என்று சொல்வது தவறு என்று உணரும் காலம் மனிதம் என்று உணரும் போது தான். 

என்னைப் பார்த்ததும் அண்ணா என்று கூப்பிட தோன்றுகிறது என்று சொன்னார்கள், அதுதான் அம்பேத்கரின் எண்ணம்.

இந்த A படம் என்பது ஒரு உரையாடலைத் தொடங்கி வைக்கிறது. அம்பேத்கரின் பெயர் அவர் ஆசிரியர் பெயர்  என்று திரித்து சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு ஆசிரியர் என்று யாருமே இல்லை. அம்பாவதே என்பது மராட்டிய மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய மாவட்டம். அப்படி அம்பாவதேக்கர் என்று அழைக்கும் போது அது அம்பேத்கர் என்று ஆகிவிட்டது என்று ஆதாரங்களுடன் ஒரு கருத்து உள்ளது.

அம்பேத்கர் - காந்தி இடையே பல முரண்பாடுகள் இருப்பினும், மதச்சார்பின்மை இல்லாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருவரும் ஒன்றிணைந்தார்கள். இந்த இடத்தில் தான் நாம் பிஜேபியுடன் முரண்படுகிறோம்.  இந்துக்கள் அதிகம் இருப்பதால் இந்து அரசாக அறிவிக்க வேண்டும் என்பதே முரண்பாடான கருத்து.

ஜனநாயக சக்தியே இந்தியாவை ஆள வேண்டும், தமிழன் அல்லது இந்து என்பதற்காகவோ இந்தியாவை ஆள விடக்கூடாது. ஒரு சாதி ரீதியான ஒருவர் ஆள முயன்றால் அது  தற்காலிகமான ஒன்றே” எனப் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA T20 Final LIVE Score: முடிந்த 8 ஓவர்கள்.. இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 59 ரன்கள்..!
முடிந்த 8 ஓவர்கள்.. இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 59 ரன்கள்..!
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA T20 Final LIVE Score: முடிந்த 8 ஓவர்கள்.. இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 59 ரன்கள்..!
முடிந்த 8 ஓவர்கள்.. இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 59 ரன்கள்..!
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!
Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!
Indian 2: அனிருத் பற்றி ஷங்கரிடம் கேளுங்கள்.. நான் இளையராஜா, ரஹ்மான் ரசிகன்.. இந்தியன் 2 நிகழ்வில் கமல்ஹாசன்!
Indian 2: அனிருத் பற்றி ஷங்கரிடம் கேளுங்கள்.. நான் இளையராஜா, ரஹ்மான் ரசிகன்.. இந்தியன் 2 நிகழ்வில் கமல்ஹாசன்!
Breaking News LIVE: பள்ளிக்கல்வி இயக்குநராக கண்ணப்பன் நியமனம்
Breaking News LIVE: பள்ளிக்கல்வி இயக்குநராக கண்ணப்பன் நியமனம்
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Embed widget