கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் மக்களுக்கு பல்வேறு சலுகைகள்
திங்கள் கிழமை தோறும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை புரியும் பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் அளிக்க வரும் பொது மக்களுக்கு வெயில் தாக்கத்தினை குறைத்திடும் அளவிற்கு பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் மேற்கொண்டார்கள்.
அந்த வகையில் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை புரியும் பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது.
மனுக்களை அளிக்க வரும் பொது மக்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்களை கொண்டு இலவசமாக கோரிக்கை மனுக்களை எழுதிக் கொடுக்கவும், கோரிக்கை மனுக்கள் எழுதும் இடத்தில் அனைவருக்கும் நீர் மோர் வழங்கவும், வரிசையில் நின்று மனு கொடுப்பவர்கள் வெயிலில் நிற்காத அளவிற்கு மேற்கூரைகள் அமைத்தும், அப்பகுதியில் சின்டெக்ஸ் டேங்க் மூலம் குடிநீர் மற்றும் மண் பானைகள் மூலம் குடிநீர் வைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் சிரமம் ஏதுமின்றி தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து மகிழ்ச்சியுடன் சென்றார்கள். அதேபோல் மாற்றுத்திறனாளிகளை காலதாமதம் படுத்தாமல் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதே இடத்தில் உடனுக்குடன் கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, பிற மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் மொத்தம் 643 கோரிக்கை மனுக்கள் வரப் பெற்றுள்ளன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 84 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றுள்ளன.
பின்னர் மாற்றுதிறனாளிகள் நலத்துறைத்துறை சார்பில் 1 பயனாளிகளுக்கு காதொலி கரூவிகளும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.540 மதிப்பீட்டில் ரூ.1080 மதிப்பிலான ஊன்றுகோலும், 1 பயனாளிக்கு ரூ.7900 மதிப்பிலான சக்கர நாற்காலியும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை 1 பயனாளிக்கு ஆதரவற்ற விதவைச்சான்றும், விதவை தொகைக்கான ஆணைகளையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பாக 20 பயனாளிகளுக்கு தலா ரூ.6000 மதிப்பீட்டில் ரூ.1,20,000 மதிப்பலான தையல் இயந்திரமும், ஆக மொத்தம் 26 பயனாளிகளுக்கு ரூ.159979 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை வாணிஈஸ்வரி, கூட்டுறவு துறை மண்டல இணைபதிவாளர் கந்தராசா, தனித்துணை ஆட்சியர்(சபாதி) சைபுதீன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.