மேலும் அறிய

ஐ ஓ பி வங்கியை தனியாருக்கு கொடுப்பதை தமிழ்நாடு அரசு தடுக்கவேண்டும் - வைகோ வலியுறுத்தல்

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை மத்திய அரசு தனியார்மயமாக்குவது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, 10.02.1937-ஆம் ஆண்டில், சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு, மு.சி.த.மு. சிதம்பரம் செட்டியார் அவர்களால் தொடங்கப்பட்டது. 1969-ஆம் ஆண்டு, நாட்டுடைமை ஆக்கப்பட்டது. தற்போது, தமிழ்நாட்டின் முன்னோடி வங்கியாகத் திகழ்கின்றது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள், குக்கிராமங்களில் 1500 கிளைகள் உள்ளன. 15 மண்டல அலுவலகங்களும்  உள்ளன.

ஐ ஓ பி வங்கியை தனியாருக்கு கொடுப்பதை தமிழ்நாடு அரசு தடுக்கவேண்டும் - வைகோ வலியுறுத்தல் 

பிற வங்கிகளை ஒப்பிடுகையில், ஐஓபி வங்கியில், பிற கிளைகளுக்குப் பணம் செலுத்துதல், புத்தகம் வரவு வைத்தல் போன்ற சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. எனவே, தமிழ்நாட்டில் ஐஓபி வங்கியில் கணக்கு வைத்துள்ள ஒருவர், இந்தியாவின் எந்த வங்கிக் கிளையிலும், சேவைக் கட்டணம் இல்லாமல், பணம் எடுக்க இயலும். பிற வங்கிகளில், இதற்குத் தனிக் கட்டணம் வாங்குகின்றார்கள். 

கிராமப்புற மக்களுக்கு, குறைந்த வட்டியில் விவசாய நகைக்கடன், பயிர்க்கடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு ஊதியம் முதலியவற்றை, ஐஓபி வழங்கி வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் கணக்குகள் ஐஓபி வங்கியில் உள்ளன. மாவட்ட நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மருத்துவக் கல்லூரிகளிலும் கிளைகள் உள்ளன. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், கடந்த 50 ஆண்டுகளாக ஐ.ஓ.பி. வங்கிக் கிளை செயல்பட்டு வருகின்றது. 

கடந்த 2005 ஆம் ஆண்டு, ஐ.ஓ.பி. வங்கியை, வடமாநில வங்கியுடன் இணைக்கத் திட்டமிட்டபோது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கடும் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். எனவே, அந்த முயற்சி அப்போது கைவிடப்பட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இரண்டு பொதுத்துறை வங்கிகளை, தனியாருக்கு விற்கப் போகின்றோம் என, நிதி அமைச்சர் நிர்மலா, பிப்ரவரி 1 அன்று, நாடாளுமன்றத்தில் வரவு செலவுக் கணக்கு தாக்கல் செய்து ஆற்றிய உரையில் குறிப்பிட்டார். அவை எந்த வங்கிகள் என்பது குறித்து ஆய்வு நடைபெற்றதாகவும், நான்கு வங்கிகளின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டதாகவும் ஏடுகளில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அவற்றுள் ஒன்றாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பெயரும் இருப்பது, தமிழ்நாட்டு மக்களுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. 

இதுவரை, ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக்கூட புதிதாகத் தோற்றுவிக்காத பாரதிய ஜனதா கட்சி அரசு, ஏற்கனவே இருக்கின்ற பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்க முயற்சிப்பது, பெருங்கேடு ஆகும். தனியார் புதிய வங்கிகளைத் தொடங்குவற்கு எந்தத் தடையும் இல்லை. அப்படி எத்தனையோ புதிய தனியார் வங்கிகள் தோன்றி இருக்கின்றன. அவர்களுடைய வங்கிகளில் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கட்டணம் வாங்குகின்றார்கள்.  எந்தவிதமான, வட்டித் தள்ளுபடியும் தருவது இல்லை. மக்களைக் கசக்கிப் பிழிகின்றார்கள் என்று குற்றம்சாட்டியுள்ள வைகோ,

ஏற்கனவே, ‘பேங்க் ஆப் தமிழ்நாடு’ என்ற பெயரில் இயங்கி வந்த வங்கியை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைத்தார்கள். இப்போது, ஐஓபியைத் தனியாருக்கு விற்க முயற்சிக்கின்றார்கள். தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்ற, 85 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற பெருமை மிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்ற பொதுத்துறை நிறுவனத்தை, தனியாரிடம் கொடுப்பதைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
Year Ender 2024: டேட்டிங் தொடங்கி மோடியின் டீப் ஃபேக், ”செத்துப்போ” சாபம் வரை - 2024ல் AI செய்த 5 நூதன சம்பவங்கள்
Year Ender 2024: டேட்டிங் தொடங்கி மோடியின் டீப் ஃபேக், ”செத்துப்போ” சாபம் வரை - 2024ல் AI செய்த 5 நூதன சம்பவங்கள்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nirmala Sitharaman on Tax : Bus Accident : நடுரோட்டில் கவிழ்ந்த ஆம்னி பஸ்கதறி தவித்த பயணிகள்பதறவைக்கும் காட்சிகள்Allu Arjun vs revanth Reddy : 21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
Year Ender 2024: டேட்டிங் தொடங்கி மோடியின் டீப் ஃபேக், ”செத்துப்போ” சாபம் வரை - 2024ல் AI செய்த 5 நூதன சம்பவங்கள்
Year Ender 2024: டேட்டிங் தொடங்கி மோடியின் டீப் ஃபேக், ”செத்துப்போ” சாபம் வரை - 2024ல் AI செய்த 5 நூதன சம்பவங்கள்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Jamie overton : சிஎஸ்கேவின் பொல்லார்ட்  இவர் தான்! பிக் பாஷ் தொடரில் கலக்கும் ஜேமி ஒவர்டன்..
Jamie overton : சிஎஸ்கேவின் பொல்லார்ட் இவர் தான்! பிக் பாஷ் தொடரில் கலக்கும் ஜேமி ஒவர்டன்..
Breaking News LIVE: மும்மொழிக் கொள்கையை ஏற்றால் அரைமணி நேரத்தில் நிதி தருவதாக மத்திய அரசு நிர்பந்தம் - அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு
Breaking News LIVE: மும்மொழிக் கொள்கையை ஏற்றால் அரைமணி நேரத்தில் நிதி தருவதாக மத்திய அரசு நிர்பந்தம் - அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Embed widget