மேலும் அறிய

Kalaimamani Award: திமுக அரசு அமைந்த பிறகு இன்னும் கலைமாமணி விருது வழங்கப்படவில்லை: வாகை சந்திரசேகர்..!

கலைமாமணி விருது மற்றும் குழு குறித்த மதுரை நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுக்கு வாகை சந்திர சேகர் பதில் அளித்துள்ளார்.

கலைமாமணி விருது மற்றும் குழு குறித்த மதுரை நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுக்கு வாகை சந்திர சேகர் பதில் அளித்துள்ளார். 

நெல்லையை சேர்ந்த சமுத்திரம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில் 2019-2020ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது. அப்போது தகுதியில்லாத பலருக்கு விருது வழங்கப்பட்டதோடு, அதற்கான சான்றிதழில் உறுப்பினர், செயலர் உள்ளிட்டோரின் கையொப்பம் கூட இன்றி அவசர கதியில் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியில்லாத நபர்களுக்கு  வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் மனுதாரர் கோரியிருந்தார்.

நீதிபதிகள் காட்டம்:

அந்த மனு விசாரணைக்கு வந்த போது, கலைமாமணி விருது எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? எவ்வாறு நபர்களை தேர்வு செய்கிறீர்கள்? என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது எனவும்,  கலை பற்றி தெரியாதவர்களுக்கு எல்லாம் கலைமாமணி விருது வழங்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர். சாதனைகள் படைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டிய விருது தற்போது 2 படங்களில் நடித்தவர்களுக்கு எல்லாம் வழங்கப்படுகிறது எனவும் சாடினார். தற்போதைய நிலையே நீடித்தால் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தை கலைக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.  2021ம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருது குறித்தும், அடுத்து வழங்கப்பட உள்ள கலைமாமணி விருதுகள் குறித்தும் தமிழ்நாடு சுற்றுலா & கலைத்துறை செயலாளர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகைச் சந்திர சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,  “திமுக அரசு அமைந்த பின்னர் இன்னும் கலை மாமணி விருது வழங்கப்படவில்லை. இன்னும் விருதுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் குழு அமைக்கப்படவில்லை. அதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதால், அதனை சரி செய்த பின்னர் குழு அமைத்து தகுதியானவர்களுக்கு விருது வழங்கப்படும்” என அவர் கூறியுள்ளார். மேலும், ”திமுக அரசினைப் பொறுத்த வரையில், சரியான நபர்களுக்குத்தான் விருது சென்றடையவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றோம். இதற்கு முன்னர் வழங்கப்பட்ட விருதுகள் குறித்து குழு அமைத்து, தகுதியானவர்கள் மற்றும் தகுதி இல்லாதவர்கள் என பிரித்து நீதிமன்றத்தில் சமர்பிப்போம்” என அவர் கூறியுள்ளார். 

கலைமாமணி விருது:

இயல், இசை, நாடக மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு,  தமிழ்நாடு அரசு  கலைமாமணி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு "கலை இளமணி”, 19 முதல் 35 வயது வரையிலான நபர்களுக்கு “கலை வளர்மதி”, 36 முதல் 50 வயது வரையினாவர்களுக்கு “கலை சுடர்மணி”, 51 முதல் 60 வயது வரையிலான நபர்களுக்கு  “கலை நன்மணி” மற்றும் 61 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு “கலை முதுமணி” என, 5 பிரிவுகளின் கீழ் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. கலைமாமணி விருது வழங்குவதற்கு என வயது வரம்பு, தகுதி மற்றும்  நெறிமுறை என எதுவும்  இதுவரை வகுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! நாளை 9 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,!நாளை 9 மாவட்டங்களின் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! நாளை 9 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,!நாளை 9 மாவட்டங்களின் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
President Murmu: நெருங்கும் ஃபெஞ்சல் புயல்.! குடியரசுத் தலைவரின் திருவாரூர் பல்கலைக்கழக பயணம் ரத்து.!
President Murmu: நெருங்கும் ஃபெஞ்சல் புயல்.! குடியரசுத் தலைவரின் திருவாரூர் பல்கலைக்கழக பயணம் ரத்து.!
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
ஏடிஎம்-ல் விட்டுச்சென்ற ரூ. 47 ஆயிரம் பணம் - அடுத்து நடந்தது என்ன?
ஏடிஎம்-ல் விட்டுச்சென்ற ரூ. 47 ஆயிரம் பணம் - அடுத்து நடந்தது என்ன?
Embed widget