மேலும் அறிய

மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?

ஆராய்ச்சி மாணவர்கள் மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகையை 3 ஆண்டுகளுக்குப் பெறும் தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு என்ன தகுதி என்று பார்க்கலாம்.

பழங்குடியினர்‌ தொடர்பான ஆராய்ச்சி மற்றும்‌ ஆய்வு மேற்கொள்ளும்‌ இளங்கலை, முதுகலை, முனைவர்‌ பட்டம்‌, முனைவர்‌ பட்ட மேலாய்வு மாணக்கரை ஊக்கப்படுத்தும்‌ வகையில்‌ தமிழ்நாடு அரசு "தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌" என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

விண்ணப்பிக்க என்ன தகுதி?

* தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டத்தின்‌ கீழ்‌ தகுதிபெற மாணாக்கரின்‌ குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சத்துக்குள்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

* மாணவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 

* மாணவர்கள் 50 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தோர் 55 வயதுக்கு உட்பட்டோராகவும் இருக்க வேண்டும். 

* மாணாக்கர்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும்‌ ஆய்வு மேற்கொள்ள வேண்டும்‌.

எவ்வளவு உதவித் தொகை?

இத்திட்டத்தின்‌ கீழ்‌ தேர்ந்தெடுக்கப்படும்‌ இளங்கலை மற்றும்‌ முதுகலை மாணாக்கருக்கு மாதம்‌ ரூ.10,000/-மும்‌ (6 மாதத்திற்கு) மற்றும்‌ முனைவர்‌ பட்டம்‌, முனைவர்‌ பட்ட மேலாய்வாளர்களுக்கு மாதம்‌ ரூ.25,000/-மும்‌ (3 வருடத்திற்கு) உதவித் தொகையாக (fellowship) வழங்கப்படும்‌.

இதன்படி, இளங்கலை மற்றும்‌ முதுகலை மாணாக்கர்கள் 25 பேருக்கும் முனைவர்‌ பட்டம்‌, முனைவர்‌ பட்ட மேலாய்வாளர்கள் 45 பேருக்கும் என மொத்தம் 70 பேருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கான நெறிமுறைகளை https://www.tn.gov.in/forms/deptname/1 என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

தற்போது தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டத்தினை 2024-2025 ஆம்‌ ஆண்டில்‌ செயல்படுத்த இத்திட்டத்திற்கான விண்ணப்பம்‌ 05.11.2024 –ல் இருந்து இணைய வழியிலும்‌ (Online) மற்றும்‌ இயன் முறையிலும்‌ (Offline) வரவேற்கப்படுகின்றன.

நவம்பர் 30 கடைசி

இணைய வழியில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள்,நேரடியாக 30.11.2024-க்குள்‌ விண்ணப்பிக்க வேண்டும்.‌ மற்றும்‌ இயன்முறையில்‌ விண்ணப்பிக்க விரும்பும்‌ மாணாக்கர்‌ https://www.tn.gov.in/forms/deptname/1 என்ற இணைப்பில் இருந்து விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம்‌ செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை இயக்குநர்‌, பழங்குடியினர்‌ நலன்‌, சேப்பாக்கம்‌, சென்னை- 600005 என்ற முகவரிக்கு 30.11.2024 க்குள்‌ அனுப்பி வைக்குமாறும்‌ கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்‌.

மேற்கண்ட விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து அவர்களை இத்திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்க, அறிவுறுத்துமாறு தொடர்புடைய பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ கல்லூரிகள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுவதாக ஆதி திராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை செயலாளர்‌ தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: https://cms.tn.gov.in/sites/default/files/forms/Tribal_studies_Fellowship.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

12th Supplementary Exam: மிஸ் பண்ணிடாதீங்க… 12ஆம் வகுப்பு ஃபெயிலா? துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
12th Supplementary Exam: மிஸ் பண்ணிடாதீங்க… 12ஆம் வகுப்பு ஃபெயிலா? துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
CBSE: சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள், மறுமதிப்பீடு இன்று தொடக்கம்; ஆதாரை கட்டாயமாக்கிய அரசு!
CBSE: சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள், மறுமதிப்பீடு இன்று தொடக்கம்; ஆதாரை கட்டாயமாக்கிய அரசு!
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Vs Amit Shah: பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
12th Supplementary Exam: மிஸ் பண்ணிடாதீங்க… 12ஆம் வகுப்பு ஃபெயிலா? துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
12th Supplementary Exam: மிஸ் பண்ணிடாதீங்க… 12ஆம் வகுப்பு ஃபெயிலா? துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Embed widget