கொலையான எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
போலீசாரை வெட்டிப்படுகொலை செய்த குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் படுகொலை செய்யப்பட்ட திருச்சி நாவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐயாக பணியாற்றியவர் பூமிநாதன் (56). நேற்றிரவு ரோந்து பணியில் இருந்த பூமிநாதன் நவல்பட்டு ரோட்டில் 3 டூவீலர்களில் ஆடுகளுடன் வந்த நபர்களை நிறுத்தினார். அவர்கள் டூவீலரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றனர்.ABP Nadu Impact: 4 ஆண்டுகளாக விடியலுக்கு காத்திருந்த கால்பந்து அணி.. அங்கீகரித்த முதல்வர் ஸ்டாலின்
ஆடுகளை திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதனை தெரிந்து கொண்ட எஸ்ஐ பூமிநாதன் அவர்களை டூவீலரில் விரட்டி சென்றுள்ளார். அந்த ஆசாமிகள் திருச்சி- புதுக்கோட்டை மெயின்ரோட்டில் மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகில் சென்ற போது ஓரு டூவீலரை தடுத்து நிறுத்திய எஸ்ஐ பூமிநாதன் அதில் இருந்த 2 திருடர்களை பிடித்தார்.
இதனைத் தெரிந்து கொண்ட மற்ற 2 டூவீலர்களில் சென்ற நபர்கள் திரும்பி வந்து பூமிநாதனிடம் தங்களது நண்பனை விடுமாறு கூறியுள்ளனர். ஆனால் பூமிநாதன் முடியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தாங்கள் அவர்கள் வைத்திருந்த அரிவாளால் வெட்டினர். படுகாயமடைந்த எஸ்ஐ பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். திருப்பூரில் கோட்சே நினைவு தின வீரவணக்க நாள்: சிவசேனா நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு!
அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த சம்பவம் சுமார் 5 மணியளவில் தான் அவ்வழியாக நபர்கள் மூலம் தெரியவந்தது. ஆடுத்திருடர்களை பிடிக்க முயன்ற எஸ்ஐ வெட்டிக்கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் போலீசாரை வெட்டிப்படுகொலை செய்த குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. Ramanathapuram: 2500 பஸ் ஆர்டர் கொடுத்தாச்சு; புது பஸ் ஸ்டாண்டும் வருது.. ராமநாதபுரத்தில் லிஸ்ட் போட்ட அமைச்சர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்