மேலும் அறிய

Transgender Saina Banu: வேலை செய்ய மாட்டீங்களான்னு கேக்குறீங்களே..? திருநங்கை சாய்னா பானுவின் குறைந்த விலை உணவை சாப்பிட வாங்க..

சென்னை எழும்பூர் பகுதியில் டேஸ்டி ஹட் என்ற உணவகம் நடத்திவரும் திருநங்கை  சாய்னா பானு தனது பேஸ்புக் பக்கத்தில் வேதனையுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

வாழும் சமூகத்தில் ஆண், பெண் என இரு பாலினத்தை கடந்து புரிந்துகொள்ளப்படாத பாலினமாக திருநங்கை, திருநம்பியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எவ்வளவுதான் படித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு வித்திட்டாலும் மக்கள் இவர்களை பார்க்கும் பார்வை மறுபட்டதாகவே இருந்து வருகிறது. 

கல்வி, விளையாட்டு, அரசு அதிகாரிகள் என இவர்களின் முன்னேற்றம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்துகொண்டே செல்கிறது. இருப்பினும், இவர்களை இந்த சமூகம் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு நபரால் புறந்தள்ளப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். 

அந்த வரிசையில், தற்போது சென்னை எழும்பூர் பகுதியில் டேஸ்டி ஹட் என்ற உணவகம் நடத்திவரும் திருநங்கை  சாய்னா பானு தனது பேஸ்புக் பக்கத்தில் வேதனையுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இதுவே ஒரு ஆண்கள் வச்சிருக்க கடைக்கு, பெண்கள் வச்சிருக்க கடைக்கு போவீங்க வருவீங்க...திருநங்கை வைத்திருக்க கடைக்கு வருவீங்களா??? சாப்பிடுவீங்களா??? அப்புறம் எதுக்கு சொல்றீங்க நீங்க வேலை செய்ய மாட்டீங்களா???? உழைக்க மாட்டீங்களா???? ஏன் சொல்லுவீங்க???? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

அன்றாட உழைக்கும் மக்களின் நிலைமைபோல் தான் இவர்களும், வாழ்வில் நாமும் தனித்துவம் பெற வேண்டும், சக மனிதர்களை போல நாமும் உயர வேண்டும் என்று வாழ்க்கையை கனவுகளோடு நகர்த்திக்கொண்டு இருக்கின்றனர். அப்படி இருக்கையில் பாலின மாறுபட்டால் இயற்கையாகவே ஏற்படும் தோற்றத்தை இன்னும் ஒரு சிலர் ஏற்க மறுத்து வருகின்றனர்.

திருநங்கை  சாய்னா பானு தன் மனதில் எவ்வளவு கனவுகளோடு உணவகத்தை திறந்து, தங்களைபோல் உள்ள மற்றவர்களுக்கு முன்உதாரணமாக இருக்க விரும்புகிறார். இருப்பினும் அவர்கள் உணவகத்திற்கு யாரும் வராததால் மனவேதனை அடைந்து அப்படி ஒரு பதிவையும் பதிவிட்டுள்ளார். 

இதைபார்த்த ஒரு சிலர், அதை ஷேர் செய்தும், சாய்னா பானுவிற்கும் ஆதரவாகவும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவுகளை கண்ட திருநங்கை சாய்னா பானு, மீண்டும் ஒரு பதிவில், என்னுடைய போஸ்ட்டை ஷேர் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்....🙏🏻🙏🏻🙏🏻இது என்னுடைய மனக்குமுறல் இல்ல மனவேதனை...அதற்கு ஒரு விடிவு காலம் வரும் என்று நான் நம்புகிறேன் என்று பதிவிட்டு, எங்களுக்கும் ஒரு விடிவு காலம் வரும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். 

 

நல்லது நடக்கும் என்று இவர்களை நம்பிக்கை உடையவர்களுக்கு ஆதரவு கொடுத்து துணையாய் நின்று தோழனாய் நிற்போம். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி ராமதாஸ் திடீர் கடிதம்...!
அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி ராமதாஸ் திடீர் கடிதம்...!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget