மேலும் அறிய
Advertisement
Railway: பாம்பன் பாலத்தில் டிசம்பர் 28 வரை ரயில் போக்குவரத்து ரத்து! - காரணம் என்ன?
ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் வாராந்திர சேவை ரயில் மட்டும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
பாம்பன் ரயில் பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து டிசம்பர் 25, 26, 27 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் (மெயின் லைன், கார்ட் லைன் ரயில்கள்)
மற்றும் டிசம்பர் 26, 27, 28 ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் (மெயின் லைன், கார்ட் லைன் ரயில்கள்) ராமேஸ்வரம் - மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
டிசம்பர் 26 முதல் 28 வரை திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி, மற்றும் அனைத்து மதுரை - ராமேஸ்வரம் - மதுரை விரைவு ரயில்கள் இரு மார்க்கத்திலும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல இதே காலத்தில் புறப்பட வேண்டிய வருகை தரவேண்டிய வாராந்திர விரைவு ரயில்களும் ராமேஸ்வரம் - மண்டபம் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் வாராந்திர சேவை ரயில் மட்டும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் உதவி மையம் 9360548465 அலைபேசி எண்ணுடனும், மண்டபம் ரயில் நிலையத்தில் உதவி மையம் 9360544307 என்ற அலைபேசி எண்ணுடனும் செயல்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தஞ்சாவூர்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion