மேலும் அறிய

யார் தலைவர்? நானா நீயா? திட்டிய கருணாநிதி! நினைவுபடுத்திய துரைமுருகன் - தேம்பி தேம்பி அழுத டி.ஆர் பாலு!

கருணாநிதி உடனான நட்பு தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் பேசியதை கேட்டு, திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தேம்பி தேம்பி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு எழுதிய பாதை மாறா பயணம் நூல் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று புத்தகத்தை வெளியிட,  முதல் பிரதியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் இரண்டாவது பிரதியை கவிஞர் வைரமுத்துவும் பெற்று கொண்டனர். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி,  உதயநிதி ஸ்டாலின் உடன் எம்.பிக்கள் கனிமொழி மற்றும் ஆ.ராசா மற்றும் மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். 

முதலமைச்சர் பேச்சு:

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டிற்காக இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைத்தவர் டி.ஆர்.பாலு. 17 வயதில் தீவிர அரசியலில் நுழைந்த பாலு ஒரே கொடி, ஒரே இயக்கம், ஒரே தலைமை என கொள்கைப் பிடிப்போடு இப்போதும் இருக்கிறார். அண்ணா கலைக்கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். எனக்கு பேச்சு பயிற்சிக் களமாக அமைந்தது டி.ஆர்.பாலுவின் அண்ணா கலைக்கழகம்தான்.

மிசா காலம் மிசா காலத்தில் டி.ஆர்.பாலுவுக்கும் எனக்கும் இடையேயான நட்பு இன்னும் நெருக்கமானது. 27 ஆண்டுகள் எம்பி ஆகவும், 3 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார் பாலு. இவையெல்லாம் டி.ஆர்.பாலுவின் உழைப்பிற்கு கிடைத்த ஊதியம். சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த கருணாநிதி தீவிரம் காட்டினார். சேது சமுத்திர திட்டத்திற்கு நிதி ஒதுக்க உதவியாக இருந்தவர் டி.ஆர். பாலு. ஆனால் இந்த திட்டத்தை பாஜக தடுத்து விட்டது. சேது சமுத்திர திட்டத்தை டி.ஆர். பாலு கையில் எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

துரைமுருகன்பேச்சு:

முன்னதாக பேசிய அமைச்சர் துரைமுருகன், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடனான தனது நட்பு தொடர்பான நினைவலைகளை பகிர்ந்துகொண்டார். அவரது கலகலப்பான பேச்சால் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

தேம்பி தேம்பி அழுத டி.ஆர். பாலு

தொடர்ந்து பேசிய துரைமுருகன், “ஒருசமயம் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக பேசும்போது கலைஞருக்கும், பாலுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கருணாநிதி சொன்னது தவறு என்றும் தான் சொல்வது சரி எனவும் பேசினார். இதனால் ஒருகட்டத்தில் கோபமடைந்த கலைஞர், நீ தலைவனா, நான் தலைவனா, நான் சொல்வது தான் சரி என கூறினார். தொடர்ந்து பாலு பேச, ஏய் போடா என கலைஞர் கூறியதும் பாலு அங்கிருந்து கோபமாக சென்று விட்டார். இதனிடையே, குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக சிறிது நேரம் யோசித்த கலைஞர்,  "பாலு சொன்னதுதான்ப்பா கரெக்ட். நான்தான்ப்பா அவசரப்பட்டு சொல்லிட்டேன்" என்றார். அதோடு, பாலுவை அழைத்து "என்னை மன்னிச்சிடு பாலு"  என கூறினார். தான் சொன்ன கருத்துக்கு தொண்டனிடம் மன்னிப்பு கேட்ட மகத்தான தலைவர் கருணாநிதி” என துரைமுருகன்  நெகிழ்ச்சியுடன் பேசினார். இதை மேடையில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த டி.ஆர். பாலு, தன்னிலை மறந்து கண்கலங்கி தேம்பி தேம்பி அழுதார். இதனால் மேடையே நெகிழ்ச்சியாக மாறியது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
TN Govt: தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
Embed widget