மேலும் அறிய

ABP Nadu Top 10, 5 Sept 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 5th September 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Minister udhayanidhi: ஆய்வு கூட்டத்தை தலைமை தாங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. அதிகாரிகளுக்கு அறிவுரை.. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், நடைபெற்றது. அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு உடனடியாகவும், விரைவாகவும் சென்றடையும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உதயநிதி அறிவுறுத்தினார்.

பொய் மூட்டையை கர்நாடக துணை முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கே வந்து தைரியமாக கூறுகிறார் - ஆர்.பி.உதயகுமார் !

மேகதாது அணைக்குறித்து கர்நாடக துணை முதலமைச்சர் பேசியதற்கு முதலமைச்சரும்,துறை அமைச்சரும், வாரிசு அமைச்சரும் வாய் திறக்கவில்லை, கூட்டணி தர்மத்திற்காக வாய் போட்டு சட்டம் போட்டு விட்டதா? இன்றைக்கு தமிழகத்திற்கு ஜெட் வேகத்தில் துரோகம் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.

Covai: பிறந்து 7 நாட்களே ஆன சிசுவிற்கு இதய அறுவை சிகிச்சை - 2.45 மணி நேரத்தில் 220 கிமீ பயணம், சீறிய ஆம்புலன்ஸ்

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சினிமா பாணியில், பிறந்த 7 நாட்களே ஆன குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதற்காக அந்த குழந்தை திருச்சியில் இருந்து கோவைக்கு, ஆம்புலன்ஸ் மூலமாக 2.45 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருச்சி : மாணவி கூட்டு பலாத்காரம்: காதலன் உள்பட 5 பேர் மீது எஸ்பியிடம் புகார்

திருச்சி மாவட்டத்தில் மாணவியை காதலிப்பதாக கூறி, காதலன் தனது நண்பர்களுடன் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தாயாருடன் வந்த மாணவி, குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என புகார் மனு அளித்தார்.

தென்காசி அருகே அச்சுறுத்தி வரும் சிறுத்தை..! 2 இடங்களில் கூண்டு வைத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு..!

செங்கோட்டை அருகே உள்ள வடகரை, மேக்கரை பகுதிகளில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரியும் நிலையில், சிறுத்தையால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அந்த பகுதியில் மக்கள் பாதுகாப்பாக நடமாட வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். இந்நிலையில், அந்த சிறுத்தையை பிடிக்க இரண்டு இடங்களில் கூண்டு வைத்துள்ளனர்.

Term Insurance: இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கு நற்செய்தி - ஜிஎஸ்டி வரியில் வரப்போகும் மாற்றம், அறிவிப்பு என்ன?

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 09 செப்டம்பர் 2024 அன்று நடைபெற உள்ளது. அதன் முடிவில்,  ஆயுள் காப்பீட்டு பாலிசிகளின் பிரீமியத்தின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Paris Paralympics: போட்றா வெடிய..! மேலும் 2 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா - பாரிஸ் பாராலிம்பிக்கில் அதகளம்

ஆடவர்களுக்கான F51 கிளப் த்ரோ பிரிவில், இந்திய வீரர் தரம்பீர் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப்போட்டியில் பந்தினை 34.92 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதனிடையே, ஆடவர்களுக்கான வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். 

Vinayagar Chaturthi 2024: நெருங்கும் விநாயகர் சதுர்த்தி.. விதவிதமான விநாயகர் சிலைகள் விறுவிறு விற்பனை.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 395 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள நிலையில் ஏராளமான விநாயகர் விற்பனைக்கு தயாராக உள்ளன.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 15,888 கன அடியில் இருந்து 17,272 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 19,700 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

The GOAT Twitter Review: தெறிக்கவிட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா விஜய்...தி கோட் பட ட்விட்டர் விமர்சனம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜயின் 68 ஆவது படமாக உருவாகியுள்ளது தி கோட். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த ல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கிய தி கோட் இன்று உலகளவில் 5000 திரையரஙகுகளில் வெளியாகி இருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
Embed widget