மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உள்ளூர் முதல் உலகம் வரை.. கடந்த 24 மணிநேரத்தில் நடந்தது என்ன? - காலை 7 மணி தலைப்புச் செய்திகள்!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் இருக்கக்கூடாது - அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
- அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சேர அர்ப்பணிப்புடன் உழைத்திடுங்கள் - புதிய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் - களத்தில் எத்தனை பேர் போட்டி என்ற விபரம் மாலை வெளியாகிறது
- சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுகவுக்கு எச்சரிக்கை மணி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தீவிர வாக்கு சேகரிப்பு - 6 மாதத்தில் மக்களின் குறைகளை சரிசெய்வேன் என வாக்குறுதி
- ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் காவல்துறை கூறும் நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை
- ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் கடத்தல்காரர்கள் வீசிய 18 கிலோ தங்கம் மீட்பு - 2 நாட்கள் நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டையில் கண்டுபிடிப்பு
- சென்னை ஆலந்தூரில் ரவுடிகளால் தாக்கப்பட்ட ஆயுதப்படை காவலர் விஜயன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - கைதான 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு
- நெல் ஈரப்பதம் தொடர்பாக தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் 4 நாட்களாக மத்திய குழுவினர் ஆய்வு - 16 இடங்களில் நெல்மணிகள் சேகரிப்பு
இந்தியா:
- நாட்டின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு வருவதாக மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு - எவ்வளவு சேற்றை அள்ளி இறைத்தாலும் அதில் தாமரை மலரும் என உறுதி
- ஆட்சியைக் கலைத்த காங்கிரசுடன் கூட்டணியா? - திமுக உறுப்பினர்களை பார்த்து கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி
- அதானி குழுமம் குறித்த புகார்கள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்கக்கோரிய வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை விண்ணில் பாய்கிறது மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி டி-2 ராக்கெட் - 3 செயற்கைக்கோள்களை அனுப்ப திட்டம்
- சர்வதேச சந்தையில் எரிவாயு விலையேற்றம் தான் இந்தியாவில் சிலிண்டர் விலை மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்
- மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இலங்கை பயணம் - இந்திய அரசின் நிதியுதவியோடு இலங்கையில் கட்டப்பட்டுள்ள கலாச்சார நிலையத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பு
உலகம்:
- துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது - தரை மட்டமான கட்டிடத்தில் உள்ளவர்களை தேடும் பணி தீவிரம்
- சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 5 முதல் 10 மீட்டர் வரை துருக்கி இடம் பெயர்ந்ததாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்
- அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட 82 வயதான ஜோ பைடன் விருப்பம்
- டிஸ்னி நிறுவனத்தில் 7 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு
விளையாட்டு:
- இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - ஜடேஜா, அஸ்வின் சுழலில் 177 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா
- 8வது மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டி தென்னாப்பிரிக்காவில் இன்று தொடக்கம் - முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion