மேலும் அறிய

TNEB Rate Hike: தமிழ்நாட்டில் புதிய மின்கட்டண உயர்வு! இன்று முதல் அமல்!

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்த பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இந்த மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று முதல் தமிழ்நாட்டில் புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. மின் கட்டண உயர்விற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

புதிய மின் கட்டணம் எவ்வளவு?

தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி  முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல்  300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்தோவருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மின் பயன்பாடு கூடுதல் கட்டணம் (2 மாதங்களுக்கு):
200 யூனிட் 55 ரூபாய்
300 யூனிட் 145 ரூபாய்
400 யூனிட் 295 ரூபாய்
500 யூனிட் 310 ரூபாய்
600 யூனிட் 550 ரூபாய்
700 யூனிட் 595 ரூபாய்
800 யூனிட் 790 ரூபாய்
900 யூனிட் 1,130 ரூபாய்

இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தின் கடன் பாக்கி எவ்வளவு?

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிலுவை தொகை தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் பேசினார். அப்போது, “தமிழக மின்சார வாரியம் இந்த வருடம் ஏற்பட்ட தொகை மட்டுமல்லாது, கடந்த பல ஆண்டுகளாக நிலுவைத் தொகையும் சேர்த்து ஏறத்தாழ 17,343 கோடி அளவிற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை 48 மாதங்களாக பிரித்து வட்டியுடன் சேர்த்து கணக்கிடப்பட்டு, ஒரு மாதத்திற்கு ஏறத்தாழ 361 கோடி என்ற அளவில் 48 மாதங்களாக மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, கடந்த மாதம் வழங்க வேண்டிய தொகை 4ஆம் தேதியே வழங்கி முடிக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
Anganwadi Workers: என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
11th 12th Exam: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; கடைசி நாளில் இதைக் கட்டாயம் செய்ங்க- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
11th 12th Exam: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; கடைசி நாளில் இதைக் கட்டாயம் செய்ங்க- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்Eknath Shinde | ”ஏக்நாத் ஷிண்டே துரோகியா?”காமெடியனை மிரட்டும் சிவசேனா சூறையாடப்பட்ட STUDIO...!Vignesh Puthur Profile | CSK-வை கதறவிட்ட விக்னேஷ் புதூர் யார்? AUTO DRIVER மகன் To IPL நாயகன்! | MI | Chennai Super Kings | IPL 2025 | Dhoni

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
Anganwadi Workers: என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
11th 12th Exam: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; கடைசி நாளில் இதைக் கட்டாயம் செய்ங்க- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
11th 12th Exam: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; கடைசி நாளில் இதைக் கட்டாயம் செய்ங்க- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய  போலீஸ்
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய போலீஸ்
Savukku Shankar: சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
Embed widget