TN Weather Update: தென் தமிழ்நாடு, டெல்டா பகுதிகளில் இந்த நாள்களில் மழை... வானிலை மையம் எச்சரிக்கை!
கிழக்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழ்நாடு, டெல்டா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
![TN Weather Update: தென் தமிழ்நாடு, டெல்டா பகுதிகளில் இந்த நாள்களில் மழை... வானிலை மையம் எச்சரிக்கை! TN weather update light to moderate rain over south Tamilnadu and Delta places details TN Weather Update: தென் தமிழ்நாடு, டெல்டா பகுதிகளில் இந்த நாள்களில் மழை... வானிலை மையம் எச்சரிக்கை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/09/1a81032a3f1c5ac275595d2d4140f4701678350442546574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தென் தமிழ்நாடு மற்றும் டெல்டா பகுதிகளில் நாளை மறுநாள் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
11.01.2023 - 13.03.2023: கிழக்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழ்நாடு, டெல்டா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) March 9, 2023
சென்னையைப் பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 32 - 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 - 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) March 9, 2023
கடும் பனி:
முன்னதாக தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நிறைவடைந்தது முதல் கடந்த சில மாதங்களாக கடும் பனி பொழியத் தொடங்கியது. காற்று வீசும் திசை மாறுபாடு காரணமாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், சென்ற மாதங்களில் சென்னையில் அதிகாலை வேளைகளில் கடும்பனி மூட்டம் அதிகரித்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகிய நிலையில், சென்னை மக்கள், சென்னை ஸ்நோ போன்ற ஹேஷ்டேக்குகளில் ட்விட்டரில் புலம்பும் அளவுக்கு பனியின் உக்கிரம் அதிகரித்தது.
நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடும் பனிமூட்டத்தால் காலை 8 மணி வரை முகப்பு விளக்குகளை வாகன ஓட்டிகள் உபயோகிக்க அவர்களது இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக தான் வெயிலின் பனியின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கத்தை மக்கள் உணரத் தொடங்கிய நிலையில், தென் தமிழக மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)