(Source: ECI/ABP News/ABP Majha)
10th 12th Revision Exam: 10, 12 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு - அட்டவணை வெளியீடு
10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் சற்று ஓய்ந்திருந்த சூழலில் கடந்த சில மாதங்களாக மீண்டும் வைரஸ் பரவலின் மூன்றாவது அலை அதிகரித்தது. அதுமட்டுமின்றி ஒமிக்ரான் வைரஸின் பரவலும் தீவிரமானது.
இதனையடுத்து வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு இறங்கியது. அதன்படி, ஞாயிறு கிழமையில் முழு நேர ஊரடங்கு, தினமும் இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணிவரை ஊரடங்கு, திரையரங்குகளில் 50 சதவீதத்தினருக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை நடைமுறைப்படுத்தியது. அந்தவகையில் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டது
இந்தச் சூழலில் வைரஸின் பரவல் சற்று குறைந்திருப்பதை அடுத்து பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் ஊரடங்கு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படுமென தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதேபோல் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் 12ஆம் வகுப்புவரை மீண்டும் நேரடி வகுப்பு தொடங்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுமென கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுக்கான அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 10ஆம் வகுப்பிற்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வானது பிப்ரவர் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரையும், இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 28ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் நான்காம் தேதிவரையும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 12ஆம் வகுப்புக்கான முதல்கட்ட திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதிவரையும், இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் ஐந்தாம் தேதிவரையும் நடக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Upcoming movies: ஊரடங்கு தளர்வுகள்.. விரைவில் 100% இருக்கைகள்? தியேட்டர் ரிலீசுக்கு வரிசை கட்டும் திரைப்படங்கள்!