TN Rain Alert: சென்னையில் வெளுக்கப்போகும் மழை...அடுத்த 3 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு...!
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN Rain Alert: சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளளது.
கனமழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 நாட்களுக்கு மழை
17.03.2023 முதல் 20.03.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 6, சிவகிரி (தென்காசி) 5, வத்திராயிருப்பு (விருதுநகர்), சின்கோனா (கோயம்புத்தூர்), பெரியார் (தேனி), திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 4, சுருளக்கோடு (கன்னியாகுமரி), பேரையூர் (மதுரை), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), இரணியல் (கன்னியாகுமரி), கொடிவேரி (ஈரோடு) தலா 3, முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), காங்கேயம் (திருப்பூர்), ராதாபுரம் (திருநெல்வேலி), கமுதி ARG (ராமநாதபுரம்), மஞ்சளார் (தேனி), கமுதி (ராமநாதபுரம்), மக்கினாம்பட்டி பொதுப்பணித்துறை (கோயம்புத்தூர்), பாலமோர் (கன்னியாகுமரி) தலா 2, சிற்றாறு (கன்னியாகுமரி), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), சோத்துப்பாறை (தேனி), சிவலோகம் (கன்னியாகுமரி), சத்தியமங்கலம் (ஈரோடு), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்`), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), தேக்கடி (தேனி), பேராவூரணி (தஞ்சாவூர்), பூதப்பாண்டி (கோயம்புத்தூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), அமராவதி அணை (திருப்பூர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), சோலையாறு (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பவானிசாகர் (ஈரோடு), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), கருப்பாநதி அணை (தென்காசி) தலா 1 செ. மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
17.03.2023 முதல் 18.03.2023 வரை: ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.