TN Rain Alert: தமிழ்நாட்டில் அடுத்த 7 ஏழு நாளைக்கு கொட்டப்போகும் மழை.. இந்த மாவட்ட மக்கள் உஷார்..
அடுத்த ஏழுதினங்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த ஏழுதினங்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட தகவலின் படி, இன்றும், நாளையும் ஓரளவு மேகமூட்டத்துடன் லேசான மழைப்பொழிய வாய்ப்பு இருப்பதாகவும், வருகிற 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 17 அன்று மேகமூட்டத்துடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 19 அன்று லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளது.
அடுத்த ஏழ தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு - சென்னை pic.twitter.com/E1JQmtkiID
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 13, 2022
தமிழகத்தில் நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன் படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டஙகளில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல கரூரிலும் மேற்கு திசை காற்று காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.