TN Pongal Gift 2022: முழுக்கரும்பு.. 21 பொருட்கள்.. பொங்கல்பரிசுத் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது தமிழ்நாடு அரசு மக்களுக்குபொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்தவகையில் தமிழ்நாட்டு அரசு பொங்கலுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை இந்தாண்டு 4ஆம் தேதி முதல் தொடங்கப்படும் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் தற்போது தொடங்கி வைத்தார். 2.15 கோடி மக்கள் அட்டை தாரர்களுக்கு பயனளிக்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்த பொங்கல் பரிசில் 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. இப்பரிசு துணி பையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களுடன் முழுக் கரும்பு ஒன்றும் வழங்கப்படுகிறது.
அதன்படி பொங்கல் பரிசில் பச்சரிசி, வெல்லம்,முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு போன்ற 21 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இம்முறை வழங்கப்பட்டுள்ள பொங்கல் பரிசில் இடம்பெற்றுள்ள பொருட்கள் என்னென்ன?
பச்சரிசி- 1 கிலோ
வெல்லம்- 1கிலோ
முந்திரி- 50 கிராம்
திராட்சை-50 கிராம்
பாசிப்பருப்பு -1/2 கிலோ
நெய்- 100 கிராம்
ஏலக்காய்- 100 கிராம்
மஞ்சள்தூள்-100கிராம்
மிளகாய்தூள்-100 கிராம்
கடலைபருப்பு-1/4கிலோ
மிளகு-50கிராம்
சீரகம்-100கிராம்
கடுகு-100 கிராம்
புளி-200கிராம்
உப்பு-1/2கிலோ
கோதுமாவு-1கிலோ
மல்லிதூள்-100கிராம்
ரவை-1கிலோ
உளுத்தம்பருப்பு-1/2கிலோ
கைப்பை-1
முழுகரும்பு-1
இந்த பரிசு பொருட்கள் அனைத்தும் 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ. 1.088 கோடி செலவில் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகை என்றால் பொதுமக்களுக்கு தித்தித்தது. காரணம், பொங்கல் பரிசாக, அரிசி, வெல்லம், கரும்பு என்று இருந்ததிலிருந்து, ரொக்கத் தொகை வழங்கப்பட்டது. அது 500, 1000 அல்ல, 2500 ரூபாய். இந்த ஆண்டு, இதுவரை பொங்கல் தொகுப்போடு பணம் வழங்கும் அறிவிப்பு வெளியாகவில்லை. கடந்த முறை எதிர்கட்சியாக இருந்த திமுக, 2500 ரூபாய் பத்தாது, 5000 ரூபாய் வழங்க வேண்டும் எனக்கூறியிருந்தது. இந்த முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக பொறுப்பேற்ற பின், கடந்த முறை வலியுறுத்திய 5 ஆயிரம் ரூபாயை வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அறிவிப்பு வெளியாகவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்