மேலும் அறிய

EPS Slams Budget: “வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனாமினிக்கி உரை“ - இடைக்கால பட்ஜெட்டை விளாசிய எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இது ஒரு ஏமாற்று பட்ஜெட் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த பட்ஜெட் வெறும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த ஏமாற்று பட்ஜெட் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் என்ன கூறினார் என்பதை இப்போது பார்க்கலாம்.

“வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனாமினிக்கி பட்ஜெட்“

சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் முடிந்த பின் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 5 ஆண்டுகளைப் போல, இந்த ஆண்டும் இடைக்கால பட்ஜெட் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, மேனாமினிக்கி உரையாகத் தான் இருந்ததே தவிர, உருப்படியாக எதுவும் இல்லை என்று விமர்சித்தார்.

நிதிநிலை அறிக்கையின்படி, மாநிலத்தின் வருவாய் சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளதாக கூறிய அவர், மத்திய அரசின் மீது குற்றம்சுமத்தும் நிதி அமைச்சர், மாநில வருவாய் குறைந்தது பற்றி விளக்கம் அளிக்கவில்லை என்று கூறினார். அதேபோல், செலவினங்களில் 15 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்தது பற்றியும் விளக்கவில்லை என்று தெரிவித்தார்.

“வரிப்பற்றாக்குறை அதிரிப்பால் மக்கள் மீது வரிச்சுமை கூடும்“

தொடர்ந்து பேசிய அவர், நிதிப்பற்றாக்குறை 16 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதேபோல் வரிப்பற்றாக்குறை உயர்ந்தால், மக்கள் மீது வரிச்சுமையும், கடன் வாங்குவதும் கூடும் என்று சுட்டிக்காட்டினார். மேலும், இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்று கூறினார்.

மேலும், ஸ்டாலின் ஆட்சி வந்த உடன், நிதிநிலையை சீர் செய்ய குழு அமைக்கப்பட்டடது. ஆனால், நிபுணர் குழு அமைக்கப்பட்ட பிறகு தான், அதிக கடன் வாங்கியுள்ளனர் என்று குற்றம்சாட்டினார். மொத்தத்தில், மாநிலத்தின் கடன் உயர்ந்தும், மக்களின் வரிச்சுமை மற்றும் கடன்சுமை அதிகரித்ததும் தான் இந்த அரசு செய்த சாதனை, வேறு ஒன்றும் இல்லை என்று விமர்சித்தார்.

“பட்ஜெட்டில் உருப்படியாக எதுவும் இல்லை“

நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து அமைச்சர்கள் 5 மணி நேரம் உரை நிகழ்த்தியபோதிலும், அதில் உருப்படியாக ஒன்றும் இல்லை என எடப்பாடி பழனிசாமி சாடினார். குறிப்பாக, வேளாண் பட்ஜெட் என்று விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் ஒன்றை தாக்கல் செய்துள்ளனர் என்றும், அத்திப்பழம் வெளியே பார்த்தால் நன்றாக இருக்கும், உள்ளே பிய்த்துப் பார்த்தால் சொத்தையாக இருக்கும் என்பது போல் இந்த பட்ஜெட் இருந்ததாக அவர் விமர்சித்தார்.

 

 

தலைப்பு செய்திகள்

TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம்.. வந்தது புதிய விதி!
திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம்.. வந்தது புதிய விதி!
Kanchipuram New Bus Stand: காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம்: விலகியது தடை! விரைவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!
காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம்: விலகியது தடை! விரைவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
Embed widget