மேலும் அறிய

Bhavatharini Death: பவதாரிணியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி; என்ன சொன்னார் தெரியுமா?

இசைஞானி இளையராஜாவின் அன்பு மகளும், என் நண்பர் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான தங்கை பவதாரிணியின் மறைவு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று மாலை 5.30 மணியளவில் இலங்கையில் உயிரிழந்த நிலையில், இன்று மாலை சென்னையில் உள்ள இல்லத்துக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. பழம்பெரும் நடிகர் சிவகுமார், நடிகர் விஜய்யின் அம்மாவும் பாடகியுமான ஷோபா சந்திரசேகர், இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்ட திரைபிரபலங்கள்  பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இயக்குனர் வெற்றிமாறன் வந்து அஞ்சலி செலுத்திய போது, "பாடகி பவதாரிணியின் மறைவு இளையராஜாவின் குடும்பத்திற்கு மட்டுமல்ல இசையுலகத்திற்கும் மிகப்பெரிய இழப்பு " என்று கூறினார். அதேபோல், பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ஆனந்த் ராஜ் பேசுகையில், "எமனுக்கு என்ன வேண்டும் எனத் தெரியவில்லை. திரையுலகில் இருந்து ஒவ்வொருவரையும் அபகரித்துக்கொண்டுள்ளார். மனைவியை இழந்து வாடும் இளையராஜா சாருக்கு மகள் துணையாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் இறந்தது பேரதிர்ச்சி. இந்த சோகத்தை தாங்கும் பலத்தை இறைவன் இளையராஜா சார் குடும்பத்திற்கு தரட்டும்" என்று கூறினார்.

அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி:

அதேபோல், இயக்குனர் தங்கர் பச்சன், சுதா கொங்கரா,விஷால் கார்த்திக் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள். தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தேமுதிக பொதுச்செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா, அமைச்சர் ஜெயக்குமார், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் அஞ்சலில் செலுத்தினார்கள். 

அஞ்சலி செலுத்திய பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "இசைஞானி இளையராஜாவின் அன்பு மகளும், என் நண்பர் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான தங்கை பவதாரிணியின் மறைவு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. கலைஞரின் குடும்பம் சார்பாக இளையராஜா குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் அஞ்சலி செலுத்த வர வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் நாளை மாலை அவர் வெளிநாடு கிளம்புகிறார். இதனால் அது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இருக்கிறார். அவர் சார்பில் இப்போது நான் அஞ்சலி செலுத்த வந்தேன்” என கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்யோடு கை கோர்க்கும் செங்கோட்டையன்.! ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சொன்ன முக்கிய தகவல்
விஜய்யோடு கை கோர்க்கும் செங்கோட்டையன்.! ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சொன்ன முக்கிய தகவல்
Constitution Day: அரசியலமைப்பு தினம் - எழுதியதற்கான ஊதியம் என்ன? எத்தனை கட்டுரைகள்? அமெரிக்காவின் டச்..
Constitution Day: அரசியலமைப்பு தினம் - எழுதியதற்கான ஊதியம் என்ன? எத்தனை கட்டுரைகள்? அமெரிக்காவின் டச்..
Tamilnadu Roundup: இந்தியா அனைத்து மக்களுக்குமானது-முதல்வர், SIR-அதிமுக குற்றச்சாட்டு, கூடியது தங்கம் விலை - 10 மணி செய்திகள்
இந்தியா அனைத்து மக்களுக்குமானது-முதல்வர், SIR-அதிமுக குற்றச்சாட்டு, கூடியது தங்கம் விலை - 10 மணி செய்திகள்
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யோடு கை கோர்க்கும் செங்கோட்டையன்.! ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சொன்ன முக்கிய தகவல்
விஜய்யோடு கை கோர்க்கும் செங்கோட்டையன்.! ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சொன்ன முக்கிய தகவல்
Constitution Day: அரசியலமைப்பு தினம் - எழுதியதற்கான ஊதியம் என்ன? எத்தனை கட்டுரைகள்? அமெரிக்காவின் டச்..
Constitution Day: அரசியலமைப்பு தினம் - எழுதியதற்கான ஊதியம் என்ன? எத்தனை கட்டுரைகள்? அமெரிக்காவின் டச்..
Tamilnadu Roundup: இந்தியா அனைத்து மக்களுக்குமானது-முதல்வர், SIR-அதிமுக குற்றச்சாட்டு, கூடியது தங்கம் விலை - 10 மணி செய்திகள்
இந்தியா அனைத்து மக்களுக்குமானது-முதல்வர், SIR-அதிமுக குற்றச்சாட்டு, கூடியது தங்கம் விலை - 10 மணி செய்திகள்
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
IND Vs SA Test: சரித்திரம் படைக்குமா? அவமானத்தை தவிர்க்குமா? 522 ரன்கள் தேவை? கடைசி நாளில் இந்திய அணி
IND Vs SA Test: சரித்திரம் படைக்குமா? அவமானத்தை தவிர்க்குமா? 522 ரன்கள் தேவை? கடைசி நாளில் இந்திய அணி
Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம்.! இது தான் லாஸ்ட் சான்ஸ்- தேதி குறித்த ஜாக்டோ ஜியோ
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம்.! இது தான் லாஸ்ட் சான்ஸ்- தேதி குறித்த ஜாக்டோ ஜியோ
T20 world cup 2026: டி20 உலகக் கோப்பை அட்டவணை - எங்கு? எப்போது? யார் யாருடன் மோதல்? இந்தியா - பாக்., போட்டி
T20 world cup 2026: டி20 உலகக் கோப்பை அட்டவணை - எங்கு? எப்போது? யார் யாருடன் மோதல்? இந்தியா - பாக்., போட்டி
Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!
Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!
Embed widget