TN Local Body Election: திருப்பத்தூரில் திருப்பம் தரப்போவது யார்...? திரும்ப அடிக்குமா திமுக... அசைத்துப் பார்க்கமா அதிமுக?
ஊராட்சி உள்ளது உள்ளபடி: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இடம் பெற்றாலும், திருப்பத்தூர் வாக்காளர்களும், வாக்கு விகிதமும் வேறு விதமாக இருக்கிறது.
சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்று திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற கையோடு தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கட்சிகளின் பலம், பலவீனம் அறியும் தேர்தல் அல்ல. அதே நேரத்தில் மக்கள் யார் பக்கம் என்பதை எடை போடும் தேர்தல். ‛உள்ளாட்சியில் நல்லாட்சி’ என்கிற தாரகமந்திரத்தின் அடிப்படையில் இந்த தேர்தலை அரசியில் கட்சிகள் அவ்வளவு எளிதில் அனுகப்போவதில்லை. சில மாதங்களுக்கு முன் பொதுத்தேர்தலை சந்தித்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. சில மாதங்களுக்கு முன் அங்கிருந்த மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது? அங்கு எந்த கட்சி கோலோச்சியது? அங்கு அதிக ஓட்டு வாங்கிய கட்சி எது? என்பது குறித்து ஏபிபி நாடு ‛உள்ளாட்சி... உள்ளது உள்ளபடி‛ பகுதியில் பார்க்கலாம். அந்த வகையில் இன்று நாம் பார்ப்பது என்றும் பரபரப்பான திருப்பத்தூர் மாவட்டம் பற்றி!
திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அந்தந்த ஒன்றியங்கள் வாரியான வாக்காளர்கள் குறித்த விபரம் இதோ:
ஊராட்சி ஒன்றியங்கள் |
சோலையார்பேட்டை |
கந்திலி |
நாட்றாம்பள்ளி |
திருப்பத்தூர் |
ஆலங்காயம் |
மாதனூர் |
தொகுதி | ஆண் வாக்காளர் | பெண் வாக்காளர் | இதர வாக்காளர் |
திருப்பத்தூர் | 1,18,225 | 1,19,438 | 16 |
ஜோலார்பேட்டை | 1,18,449 | 1,20,010 | 7 |
வாணியம்படி | 1,22,012 | 1,25,845 | 37 |
ஆம்பூர் | 1,14,905 | 1,21,902 | 12 |
மாவட்ட மொத்த வாக்காளர்கள் விபரம்:
மாவட்டம் | மொத்தம் | ஆண்கள் | பெண்கள் | இதர |
திருப்பத்தூர் | 9,60,858 | 4,73,591 | 4,87,195 | 72 |
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதோ அதன் விபரம்:
முதல் கட்ட தேர்தல் |
சோலையார்பேட்டை கந்திலி நாட்றாம்பள்ளி திருப்பத்தூர் |
இரண்டாம் கட்ட தேர்தல் |
ஆலங்காயம் மாதனூர் |
யாருக்கு பலம்....? ‛உள்ளது உள்ள படி’!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்சிவாரியாக பெற்ற வாக்குகளின் அடிப்படையிலும், கட்சிகள் பெற்ற வெற்றியின் அடிப்படையிலும் அந்த மாவட்டத்தில் கட்சிகளின் பலத்தை காணலாம்.
1.திருப்பத்தூர்
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
நல்லதம்பி | திமுக | 96,522 |
டி.கே.ராஜா | பாமக(அதிமுக) | 68,282 |
ரபீக் அகமது | மஜக(மக்கள் நீதி மய்யம்) | மனு தள்ளுபடி |
சுமதி | நாம் தமிழர் | 12,127 |
ஞானசேகர் | அமமுக |
2,702 |
கிட்டத்தட்ட 28,240 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் தோல்வியை சந்தித்துள்ளார். திமுகவின் அபார வெற்றி இத்தொகுதியில் தனித்துவமான வாக்குகளை அதற்கு பெற்றுத்தந்துள்ளது. மநீம கூட்டணியில் போட்டியிட்ட மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ரபீக் அகமதுவின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அங்கு அக்கட்சி போட்டியிடவில்லை. இருந்தாலும் கூட நாம் தமிழர் கட்சி 12 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை தனியாக அங்கு பெற்றுள்ளது. அமமுக 3 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளையே அங்கு பெற்றது. திமுக கூட்டணியின் ஓட்டு அறுவடை இந்த தேர்தலிலும் தொடரலாம்.
கூட்டணி | வாக்கு சதவீதம் |
திமுக | 51.91% |
அதிமுக | 36.72% |
மக்கள் நீதி மய்யம் | 0.0% |
அமமுக | 1.45% |
நாம் தமிழர் | 6.52% |
2.சோலையார்பேட்டை(ஜோலார்பேட்)
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
தேவராஜி | திமுக | 89,490 |
கே.சி.வீரமணி | அதிமுக | 88,399 |
ஆர்.கருணாநிதி | சமக(மநீம) | 1,067 |
சிவா | நாம் தமிழர் | 13,328 |
தென்னரசு சாம்ராஜ் | அமமுக |
619 |
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 1091 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்த தொகுதி. கடைசி வரை அதிமுக மோதியது என்று கூறுவதை விட, ஒரு அமைச்சர் வேட்பாளரை திமுக தோற்கடித்திருக்கிறது என்பது தான் சரியாக இருக்கும். வாக்கு வித்தியாசம் மிகக்குறைவு தான் என்றாலும், தோல்வி தோல்வியே. அமமுக 619 வாக்குகளை பெற்றிருக்கிறது. எனவே வித்தியாசத்தோடு ஒப்பிடும் போது அதிமுகவின் வெற்றியை அது பாதிக்கவில்லை. அதே நேரத்தில் நாம் தமிழர் 13 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறது. இது கவனிக்கப்பட வேண்டியது. அதே போல், மநீம கூட்டணியில் சமக வேட்பாளர் 1067 வாக்குகள் பெற்றிருக்கிறார். கிட்டத்தட்ட வீரமணியின் ஓட்டு வித்தியாசத்தை அது நெருங்கும். ஆனாலும் அது மட்டுமே தோல்விக்கான காரணம் என கூறமுடியாது. பிரபலமான அமைச்சருக்கே சாதகமில்லை என்பதால், பிற வேட்பாளர்களின் நிலைமை சிரமம் தான்.
கூட்டணி | வாக்கு சதவீதம் |
திமுக | 45.57% |
அதிமுக | 45.02% |
மக்கள் நீதி மய்யம் | 0.54% |
அமமுக | 0.32% |
நாம் தமிழர் | 6.79% |
3.வாணியம்பாடி
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
செந்தில்குமார் | அதிமுக | 88,018 |
முகமது நயிம் | இயூமுலி(திமுக) | 83,114 |
ஞானதாஸ் | அஇசமக(மநீம) | 1,868 |
தேவேந்திரன் | நாம் தமிழர் | 11,226 |
வக்கீல் அஹமத் | அஇமுஇ(அமமுக) |
1,897 |
வாணியம்பாடியிலும் சிறுபான்மை வாக்குகள் சற்று அதிகம். ஆனாலும் அங்கு சிறுபான்மை வேட்பாளரை நிறுத்திய திமுக கூட்டணி தோல்வியடைந்தது. அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் 4,904 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியின் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை தோற்கடித்தார். இங்கு நாம் தமிழர் கட்சி 11 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. இது அதிமுகவின் வெற்றி வித்தியாசத்தை விட அதிகமானதாகும். அதே நேரத்தில் மநீம மற்றும் அமமுக கூட்டணி வேட்பாளர்கள் 2 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளையே இங்கு பெற்றனர். தற்போது இந்த தொகுதி அதிமுகவிற்கு சாதகமாக இருந்தாலும், வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதால் முடிவுகள் எப்படியும் வரலாம்.
கூட்டணி | வாக்கு சதவீதம் |
திமுக | 43.74% |
அதிமுக | 46.33% |
மக்கள் நீதி மய்யம் | 0.98% |
அமமுக | 1.00% |
நாம் தமிழர் | 5.91% |
4.ஆம்பூர்
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
விஸ்வநாதன் | திமுக | 90,476 |
நஷர் முகமது | அதிமுக | 70,244 |
ராஜா | அஇசம(மநீம) | 1,638 |
மெஹருநிஷா | நாம் தமிழர் | 10,150 |
உமர் பாரூக் | எஸ்டிபிஐ(அமமுக) |
1,793 |
சிறுபான்மையினர் ஓட்டுகள் அதிகம் உள்ளதாக கூறப்படும் ஆம்பூரில் அதிமுக சார்பில் சிறுபான்மை பிரிவை சேர்ந்த வேட்பாளர் களமிறக்கப்பட்டும், அங்கு பாஜக கூட்டணியின் விளைவாக அதிமுக மிகக்குறைந்த வாக்குகளே பெற்று தோல்வியை தழுவியது. 20,232 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் விஸ்வநாதன் வெற்றி பெற்றார். அமமு, நாம் தமிழர் போன்றோரும் சிறுபான்மை வேட்பாளரை களமிறங்கினர். அதில் நாம் தமிழர் மட்டும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றார். இது அவர்களின் சராசரி ஓட்டு. அதே நேரத்தில் அமமுக கூட்டணியில் போட்டியிட்ட எஸ்டிபிஐ கட்சி வெறும் 1793 வாக்குகள் மட்டுமே பெற்றது. வெற்றி வித்தியாசம், பிற கட்சிகளின் வாக்குகளை வைத்து பார்க்கும் போது திமுக ஓட்டு வங்கி பெருவாரியாக இங்கு உள்ளது.
கூட்டணி | வாக்கு சதவீதம் |
திமுக | 50.86% |
அதிமுக | 39.49% |
மக்கள் நீதி மய்யம் | 0.92% |
அமமுக | 1.01% |
நாம் தமிழர் | 5.71% |
திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்சிகளின் பலம்... பலவீனம் என்ன...?
கட்சி | பலம் | பலவீனம் |
திமுக |
சிறுபான்மை ஓட்டுகள் கே.சி.வீரமணி ரெய்டு கூட்டணி தொடர்கிறது ஏற்கனவே பெற்ற வெற்றி ஆளுங்கட்சி என்கிற சாதகம் குறுகிய காலத்தில் ஆட்சிக்கு கிடைத்த நற்பெயர் பண பலம் |
அதிமுகவிற்கு கிடைத்த வாக்குகள் அதிமுக வாக்கு சதவீதம் கூட்டணி பங்கீடு விஜய் மக்கள் இயக்கம் |
அதிமுக |
கடந்த கால வாக்கு விகிதம் கைவசம் ஒரு வெற்றி பண பலம் |
பாஜக கூட்டணி கே.சி.வீரமணி ரெய்டு நீக்கப்பட்ட நிர்வாகிகள் பாமக கூட்டணி வெளியேற்றம் நாம் தமிழர் வாக்குகள் எதிர்கட்சியாக தேர்தல் சந்திப்பு விஜய் மக்கம் இயக்கம் |
நாம் தமிழர் |
சட்டமன்றத்தில் கிடைத்த வாக்குகள் சீரான வாக்கு விகிதம் கூட்டணி இல்லாதது |
உள்ளூர் செல்வாக்கு இல்லாத வேட்பாளர்கள் பண பலம் மாவட்டத்தில் முன்னெடுக்கும் தலைமை |
மக்கள் நீதி மய்யம் |
கமல் என்கிற அடையாளம் |
கூட்டணிக்கு தாரைவார்த்தது மிகக்குறைவான வாக்கு விகிதம் கட்சியில் ஏற்பட்ட பிளவு மாவட்டத்தில் முன்னேடுக்கும் தலைமை பண பலம் |