மேலும் அறிய

TN Jobs: தமிழ்நாடு முழுவதும் 66 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு...வெளியான ரிப்போர்ட்!

தமிழகம் முழுவதும் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TN Jobs: தமிழகம் முழுவதும் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

66 லட்சம் பேர் காத்திருப்பு:

தமிழகத்தில் உயர் கல்வி படிப்பு முடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆண்டுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளி மற்றும் உயர்கல்வி முடித்து வெளியே வருகின்றனர். இவர்கள் அனைவரும் வருடன் தவறால் வேலைவாய்ப்பு அலுவலங்களில் தங்களின் பதிவை புதுப்பித்து வருகின்றனர். தமிழகத்தில் மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும், சென்னை மற்றும் மதுரையில் மாநில தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இயங்கிவருகின்றன. இதுதவிர சென்னையில் கூடுதலாக சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன.

பட்டப் படிப்பு வரையான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், முதுநிலை படிப்பு, பொறியியல், மருத்துவம் உட்பட தொழில் படிப்பின் தகுதியைசென்னை அல்லது மதுரையில் உள்ள மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவுசெய்ய வேண்டும். இந்தப் பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வரவேண்டும். இந்நிலையில், தமிழகம் முழுவதும் மொத்தம் 66 லட்சத்து 55 ஆயிரத்து 766 பேர்  அரசு வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆண்கள், பெண்கள் எத்தனை பேர்?

2023 ஜூலை 31ஆம் தேதி வரையிலான புள்ளிவிவரத்தின்படி, தமிழகத்தில் வேலை வேண்டி பதிவு செய்துள்ள ஆண்களின் எண்ணிக்கை 30,94,630 (30 லட்சத்து 94 ஆயிரத்து 630), பெண்களின் எண்ணிக்கை 35,60,846 (35 லட்சத்து 60 ஆயிரத்து 846), மூன்றாம் பாலினத்தவரின் எண்ணிக்கை 290. மொத்தம் 66 லட்சத்து 55 ஆயிரத்து 766 பேர் வேலைக்காக விண்ணப்பித்துக் காத்துக்கொண்டுள்ளனர்.

வயது வாரியாக ஏப்ரல் 30 2023 வரை வேலைக்காக விண்ணப்பித்திருப்போர் விவரம் வருமாறு:

18 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் 16 லட்சத்து 87 ஆயிரத்து 537 பேர். 19 வயது முதல் 30 வயது வரையிலானவர்கள் 28 லட்சத்து 53 ஆயிரத்து 916 பேர். 31 முதல் 45 வயதிலானவர்கள் 18 லட்சத்து 51 ஆயிரத்து 474 பேர். 46 முதல் 60 வயதுடையவர்கள் 2 லட்சத்து 56 ஆயிரத்து 68 பேர் ஆவர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,771 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 284 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர் என்று தமிழ்நாடு  அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேலையின்மை:

தமிழக நிலவரம் இவ்வாறாக இருக்க, கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதத்தில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. அதோடு முந்தைய 4 மாதங்களில் மிகக் குறைந்த அளவை வேலையின்மை விகிதம் எட்டியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 7.95 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.  ஜூன் மாதத்தில் 8.45 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை ஜூலை மாதத்தில் குறைந்துள்ளது என்று இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) 2023 ஜூலை மாதத்துக்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டது.

மேலும் படிக்க 

Twitter Block: இதுவும் போச்சா! எலான் மஸ்கின் அடுத்த அதிரடி...இனி ப்ளாக்கும் பண்ணமுடியாது...கொந்தளித்த பயனர்கள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Embed widget