மேலும் அறிய

Twitter Block: இதுவும் போச்சா! எலான் மஸ்கின் அடுத்த அதிரடி...இனி ப்ளாக்கும் பண்ணமுடியாது...கொந்தளித்த பயனர்கள்!

எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இருந்து ப்ளாக் செய்யும் வசதி விரைவில் நீக்கப்பட இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருப்பது பயனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Twitter Block: எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இருந்து ப்ளாக் செய்யும் வசதி விரைவில் நீக்கப்பட இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருப்பது பயனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளாக் செய்யும் வசதி விரைவில் நீக்கம்:

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே, ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார்.  இந்த மாற்றங்கள் பயனர்கள் மத்தியில்  கலவையான விமர்சனைங்கள் பெற்று வருகிறது. அண்மையில் கூட ட்விட்டர் பெயரை ’எக்ஸ்’ என மாற்றயுள்ளார்.  இப்படி எக்ஸ் தளத்தில் பல்வேறு மாற்றங்கள் வரும் நிலையில், தற்போது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதாக எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார். 

அதாவது, எக்ஸ் தளத்தில் இருந்து பிடிக்காத பயனர்களின் கணக்குகளை ப்ளாக் செய்ய முடியாது. அவர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்திகளை மட்டுமே மியூட் செய்ய முடியும். மேலும், அவர்களது பதிவுகள் நமது டைம்லைனில் வருவதையும் தடுக்க முடியாது. இந்த ப்ளாக் ஆப்ஷனானது விரைவில் எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். தற்போது எக்ஸ் தளத்தில் இருக்கும் ப்ளாக்கிங் ஆப்ஷன் மூலம் ப்ளாக் செய்யப்பட்ட பயனர்களின் பதிவுகள் மற்றும் மெசேஜ்கள் வராமல் தடுக்க முடியும். இந்த வசதி தேவையில்லாத மெசேஜ்கள், ஸ்கேம் போன்றவற்றை வராமல் தடுத்தது. ஆனால் தற்போது இந்த வசதி நீக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தது பயனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டரில் குவியும் மாற்றங்கள்:

 எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே, ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார். காசு கட்டினால்தான் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை பலவற்றை குவித்து தள்ளினார். அதோடு, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் திட்டத்தையும் ட்விட்டர் அறிவித்தது. பணம் கட்டி வெரிஃபைடு செய்யப்பட்ட கணக்குகளை கொண்ட பயனாளர்கள் உட்பட பலருக்கும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெரிஃபைடு செய்யப்பட்ட பயனாளர்கள், வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் மற்றும் புதிய வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் என 3 விதங்களாக பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அண்மையில் வந்த அப்டேட்:

வெரிஃபைடு செய்யப்பட்ட கணக்குகளை கொண்ட பயனாளர்கள் நாள் ஒன்றிற்கு 10 ஆயிரம் ட்வீட்களை அணுக முடியும். வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் 1000 ட்வீட்களையும், புதிய வெரிஃபைடு செய்யப்படாத கணக்குகளை கொண்ட பயனாளர்கள் 500 ட்வீட்களையும் அணுக முடியும். மேலும், வெரிஃபைடு செய்யப்படாத கணக்கில் இருந்து, மற்றொரு கணக்கிற்கு அனுப்பக்கூடிய  நேரடி மெசேஜ்களின் (DM) அளவை குறைத்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.  இதனால் ட்விட்டர் ப்ளூ டிக் இல்லாத பயனர்கள், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு தான் மெசெஜ்களை (DM) பகிரிந்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தலைப்பு செய்திகள்

ரூ.85,000-க்கும் கீழ் Samsung Galaxy S25 Ultra 5G? அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகை!
ரூ.85,000-க்கும் கீழ் Samsung Galaxy S25 Ultra 5G? அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகை!
Samsung Galaxy Price Hike: சாம்சங் கேலக்ஸி பிரியர்களே நோட் பண்ணுங்க.! எகிறிய விலை; எந்தெந்த மாடல், எவ்வளவுன்னு தெரியுமா.?
சாம்சங் கேலக்ஸி பிரியர்களே நோட் பண்ணுங்க.! எகிறிய விலை; எந்தெந்த மாடல், எவ்வளவுன்னு தெரியுமா.?
தஞ்சை அருகே பட்டப்பகலில் பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி... நகைகளை திருடிய 2 பேர் கைது
தஞ்சை அருகே பட்டப்பகலில் பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி... நகைகளை திருடிய 2 பேர் கைது
Vivo X 500: 7,500mAh பேட்டரியுடன் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்.. மாடல், விலை விவரங்கள் தெரிஞ்சுகோங்க!
Vivo X 500: 7,500mAh பேட்டரியுடன் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்.. மாடல், விலை விவரங்கள் தெரிஞ்சுகோங்க!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2 நாட்களில் 9 கொலைகள்; பெண் காவலரே பலி- என்ன செய்கிறார் டம்மி முதல்வர்? உதயநிதி கேள்வி
2 நாட்களில் 9 கொலைகள்; பெண் காவலரே பலி- என்ன செய்கிறார் டம்மி முதல்வர்? உதயநிதி கேள்வி
TN Chief Secretary : ‘புதிய தலைமைச் செயலாளருக்கு கடும் போட்டி’ ராஜேஸ் லக்கானிக்கு எதிராக பெரிய லாபி..!
‘தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளர் யார்?’ லாபி செய்யும் அதிகாரிகள்..!
EPS: ”இந்த கணக்கு கூட தெரியாதா? எடப்பாடிக்கு அறியாமையா? அறிவீனமா?” அமைச்சர் வெங்கட்ரமணன் பதிலடி
”இந்த கணக்கு கூட தெரியாதா? எடப்பாடிக்கு அறியாமையா? அறிவீனமா?” அமைச்சர் வெங்கட்ரமணன் பதிலடி
கர்நாடக முதல்வரை பார்த்து பயமா..? சிஎம் விஜய்க்கு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய இபிஎஸ்
கர்நாடக முதல்வரை பார்த்து பயமா..? சிஎம் விஜய்க்கு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய இபிஎஸ்
TN Govt: அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
TN RAIN ALERT : இடி, மின்னல், 50 கி.மீ. வேகத்தில் காற்று.! 11 மாவட்டங்களை குறிவைத்த கன மழை - எங்கெல்லாம் தெரியுமா.?
இடி, மின்னல், 50 கி.மீ. வேகத்தில் காற்று.! 11 மாவட்டங்களை குறிவைத்த கன மழை - எங்கெல்லாம் தெரியுமா.?
தமிழக ஆண்களின் அகால மரணம்: மதுவின் கோரப்பிடி- அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
தமிழக ஆண்களின் அகால மரணம்: மதுவின் கோரப்பிடி- அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
மாருதி சிஎன்ஜி ஆட்டோமேட்டிக்: ஸ்விஃப்ட், டிசையர், பலேனோவில் புதிய மைலேஜ் புரட்சி!
மாருதி சிஎன்ஜி ஆட்டோமேட்டிக்: ஸ்விஃப்ட், டிசையர், பலேனோவில் புதிய மைலேஜ் புரட்சி!
Embed widget