மேலும் அறிய

TN Govt: மீண்டும் சிக்சர் அடித்த விஜய்.. 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யத் தடை..

21 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, டாஸ்மாக் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 21 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, டாஸ்மாக் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

வயது சரிபார்ப்பு கட்டாயம்

சமீபகாலமாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மதுப் பழக்கம் அதிகரித்து வருவதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில்:

  • மது வாங்க வரும் நபரின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால், விற்பனையாளர்கள் அவரிடம் உரிய வயதுச் சான்றிதழைப் கேட்டுப் பெற வேண்டும்.

  • ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் (Driving License), வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசு அங்கீகாரம் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே மது வழங்க வேண்டும்.

  • 21 வயது பூர்த்தியாகாத நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் மது விற்பனை செய்யக் கூடாது என்பதில் பணியாளர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

துறை ரீதியான நடவடிக்கை எச்சரிக்கை

இந்த விதிமுறைகளை மீறும் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விதிமீறல் கண்டறியப்பட்டால் பணியிடை நீக்கம்  உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு தீவிரம்

ஒவ்வொரு கடையின் முன்பும் "21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனை செய்யப்படமாட்டாது" என்ற வாசகம் அடங்கிய அறிவிப்புப் பலகையைத் தெளிவாகத் தெரியும்படி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட மேலாளர்கள் தலைமையிலான பறக்கும் படையினர் அவ்வப்போது கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபடுவார்கள் என்றும், அப்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைப் பணியாளர்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

717 டாஸ்மாக் கடைகள் மூடல்: 

தவெக ஆட்சி பொறுப்பெற்றதிலிருந்து பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அந்த வகையில் கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையம் அருகில் உள்ள 717 மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்த விதி ஏற்கெனவே அமலில் இருந்தாலும் தற்போது மீண்டும் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்கிற உத்தரவு பறந்ததுள்ளது. அரசின் இந்த அதிரடி உத்தரவுகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget