மேலும் அறிய

TN Corona Spike:சற்று குறைந்த கொரோனா பாதிப்பு: தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் நிலை என்ன?

TN Corona Spike: தமிழ்நாட்டில் மேலும் 502 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் மேலும் 502 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. வீட்டு தனிமை மற்றும் மருத்துவமனைகளில் 3,671 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 66 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த 513 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் மேலும் 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நிலவரம்:

உலக அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்தது. இப்போது, கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. சுகாதார ரீதியாக மட்டுமின்றி,  பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. இதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்த நிலையில், விஞ்ஞான உலகின் தொடர் ஆராய்ச்சிகள், தடுப்பூசிகள் காரணமாக பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அதேபோல, பருவகால காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடல் ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டியது அவசியம்

நுரையீரல் ஆரோக்கியம்

நுரையீரல் அல்வியோலி எனப்படும் மில்லியன் கணக்கான சிறிய காற்றுப் பைகளால் ஆனது, அவை இரத்த ஓட்டத்திற்கும் நாம் சுவாசிக்கும் காற்றுக்கும் இடையில் வாயுக்களை பரிமாறிக் கொள்கின்றன. சளியை உற்பத்தி செய்வதன் மூலமும், சுவாசக் குழாயில் இருந்து நச்சுகள் மற்றும் தேவையற்ற விஷயங்களை அகற்றுவதன் மூலம் உடலின் pH சமநிலை மற்றும் நோயெதிர்ப்பு பாதுகாப்பை பராமரிக்கின்றன. கொரோனா முதலில் சுவாச மண்டலத்தைப் பாதிப்பதால், நுரையீரல் ஆரோக்கியம் மிகவும் அவசியமாகிறது. நுரையீரல் ஆரோக்கியமாக இருந்தால், கடுமையான நோய் அல்லது வைரசால் ஏற்படும் சிக்கல்களின் அபாயம் குறைகிறது.

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில வழிகள்:

புகைபிடிக்க வேண்டாமே!

புகைபிடித்தல் சுவாச மண்டலத்தை சேதப்படுத்துவதுடன், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது. இது கொரோனா உட்பட பல தொற்றுநோய்கள் மிகவும் எளிதில் பாதிக்க வழி வகுக்கிறது. ஆரோக்கியமான நுரையீரலை பேன நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் புகைபிடிப்பதை கைவிடுவதாகும்.

ஆழ்ந்த சுவாசப் பயிற்சி

ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் நுரையீரல் திறனை மேம்படுத்தும். சுவாச தசை வலிமையை மேம்படுத்தவும் உதவும். உதரவிதான சுவாசம் (diaphragmatic breathing) அல்லது பர்ஸ்டு-லிப் சுவாசம் போன்ற நுட்பங்களை தினசரி வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள முயற்சிக்கவும்.

இதோடு ஆரோக்கியமான உணவு, சீரான உடற்பயிற்சி உள்ளிட்டவற்றையும் பின்பற்ற வேண்டும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget