மேலும் அறிய

TN Corona Cases Daily Update : தமிழகத்தில் ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரமாக உயர்ந்தது..

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10 ஆயிரத்து 986 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 48 நபர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து மாநிலத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரத்து 986 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 6 ஆயிரத்து 250 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் புதிதாக 10 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 13 ஆயிரத்து 378-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 3 ஆயிரத்து 711 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 90 ஆயிரத்து 364 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

TN Corona Cases Daily Update : தமிழகத்தில் ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரமாக உயர்ந்தது..

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டும் 6 லட்சத்து 11 ஆயிரத்து 836 ஆகும். பெண்கள் 4 லட்சத்து ஆயிரத்து 506 நபர்கள் ஆவார்கள். மூன்றாம் பாலினத்தவர்கள் 35 நபர்கள் ஆவர். இன்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 6 ஆயிரத்து 689 நபர்களும், பெண்கள் 4 ஆயிரத்து 297 ஆகும்.

கொரோனா தொற்று குணமடைந்து இன்று மட்டும் 6 ஆயிரத்து 250 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 20 ஆயிரத்து 369 ஆக உள்ளது. மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி இன்று 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 26 பேர் தனியார் மருத்துவமனையிலும், 22 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள். தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 99 ஆயிரத்து 246 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று ஒருநாள் மட்டும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 55 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் இருப்பவர்கள் 7 ஆயிரத்து 275 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்து 804 ஆகும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்.. 8  பேர் உயிரிழப்பு.. திருப்பத்தூரில் கோர விபத்தி
நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்.. 8 பேர் உயிரிழப்பு.. திருப்பத்தூரில் கோர விபத்தி
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்.. 8  பேர் உயிரிழப்பு.. திருப்பத்தூரில் கோர விபத்தி
நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்.. 8 பேர் உயிரிழப்பு.. திருப்பத்தூரில் கோர விபத்தி
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
காதலன் இறந்த சோகம்! காதலி எடுத்த விபரீத முடிவு.. திருப்பத்தூரில் பரபரப்பு
காதலன் இறந்த சோகம்! காதலி எடுத்த விபரீத முடிவு.. திருப்பத்தூரில் பரபரப்பு
Ditwah Cylone 3 Dead: டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
US Suspends Visa: ஆப்கானிஸ்தானியர்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா; விசா நிறுத்தம் - ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி
ஆப்கானிஸ்தானியர்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா; விசா நிறுத்தம் - ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி
Embed widget