MK Stalin Speech: ''இந்த ஊருக்கு வந்தேன்.. முழு அரசியல்வாதியா மாறினேன்'' நினைவுகளை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுகூட்டத்தில் முதலமைச்சர் விளக்க உரையாற்றினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுகூட்டத்தில் முதலமைச்சர் விளக்க உரையாற்றினார்.
பொதுகூட்டத்தில் அவர் பேசியதாவது, “ எதிர்கட்சியாக இருந்த போதே நாடாளுமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றது. சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு கோட்டையை கைப்பற்றி இருக்கிறோம். நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு திமுக வெற்றி பெற்றிருக்கிறது.
திமுகவிற்கு வாக்களித்தால் நன்மை செய்வார்கள். திட்டங்களை வகுப்பார்கள் என நம்பி வாக்களித்த தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். 1969 முன்பு வரை ஒருங்கிணைந்த காஞ்சிபுரத்திற்கு தலைநகரமாக இருந்தது.
முழுநேர அரசியல்வாதி
திமுக மிகவும் நெருக்கடியான காலக்கட்டத்தில் பதவிக்கு வந்தது. கொரோனா சூழ்நிலை போய் தற்போது மக்கள் சாதரண நிலைக்கு வந்துள்ளனர். இதுதான் திமுகவின் அரிய சாதனையாக கருதுகிறேன். 1976 ஆம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்டது போது நான் மதுராகந்தில் வெற்றி நமதே நாடகம் நடத்த வந்தேன். ஆட்சி கலைக்கப்பட்டது தெரிந்ததும் சென்னை திரும்பினேன். மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டேன். அதன் பின்னர் முழுநேர அரசியல் வாதியாக மாறி தமிழ்நாடு முழுவதும் சுற்றி வர தொடங்கினேன்” என்று பேசினார்.