TN CM MK Stalin: கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்..!
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Wishing a very happy birthday to Hon'ble @CMOKerala Thiru @PinarayiVijayan!
— M.K.Stalin (@mkstalin) May 24, 2024
May you have a year filled with good health and success.
இது தொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “ கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் வெற்றியும் நிறைந்த ஆண்டாக அமையட்டும்” என தெரிவித்துள்ளார்.
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தனது 79 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளா மாநிலம் கன்னூரில் பிறந்த இவர் 1964 ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்தார். 2016 ஆம் ஆண்டு முதல் கேரளா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Warmest birthday wishes to Kerala's steadfast leader, @pinarayivijayan . Your commitment to the people of Kerala and visionary leadership continue to elevate the state. May your journey ahead be filled with success and prosperity. pic.twitter.com/TcyAFgABVq
— Kamal Haasan (@ikamalhaasan) May 24, 2024
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கேரள முதலமைச்சர் பினரயி விஜயனை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், “ கேரளாவின் உறுதியான தலைவருக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள், பினராய்விஜயன். கேரள மக்களுக்கான உங்களின் அர்ப்பணிப்பும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைமையும் தொடர்ந்து மாநிலத்தை உயர்த்தி வருகிறது. உங்கள் முன்னோக்கிய பயணம் வெற்றியுடனும் செழிப்புடனும் இருக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.