மேலும் அறிய

Annamalai Unwell: பாதயாத்திரையை ஒத்திவைத்த பாஜக: மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை: அண்ணாமலைக்கு என்ன ஆச்சு!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரை இரண்டு வார காலம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரை இரண்டு வார காலம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் தமிழ்நாடு பாஜக சார்பில் நடத்தப்பட்டு வந்த என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது வரும் 6ஆம் தேதி நடக்கவிருந்த பாதயாத்திரை 16ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் நாளை திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Annamalai Unwell: பாதயாத்திரையை ஒத்திவைத்த பாஜக: மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை: அண்ணாமலைக்கு என்ன ஆச்சு!

 

மேலும் இதுதொடர்பாக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’39வது நிரம்பிய அண்ணாமலை அக்டோபர் 3ஆம் தேதி பிற்பகலில் மருத்துவமனைக்கு வந்தார். அவர் தனக்கு, தொடர் இருமல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம், உடல் வலி மற்றும்  உடல் சோர்வு ஆகிய காரணங்களுக்கு சிகிச்சை எடுக்க வந்தார். இதையடுத்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு  5 நாட்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் பரிசோதனைக்கு வரவேண்டும். 2 வாரங்கள் நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

என் மண் என் மக்கள் பாதயாத்திரை 

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். யாத்திரை மொத்தம் 5 கட்டங்களாக 168 நாட்கள் யாத்திரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போதுவரை, இரண்டு கட்ட யாத்திரை நிறைவடைந்துள்ளது. ஊழலுக்கு எதிராகவும்,  நரேந்திர மோடியை 3ஆவது முறையாக பிரதமராக்க தமிழ்நாட்டில் இருந்தும் எம்.பிக்களை அனுப்ப தமிழ்நாடு மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்திலும், ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை தொடங்கப்பட்டது. 

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், என் மண் என் மக்கள் யாத்திரை தேதியில் மற்றம் செய்யப்படவுள்ளதாக தமிழ்நாடு பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அக்டோபர் 6ஆம் தேதி பாதயாத்திரை மீண்டும் தொடங்கவிருந்த நிலையில், அண்ணாமலைக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16ஆம் தேதிக்கு யாத்திரை ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக  தலைமை தரப்பில் ட்விட்டர் பதிவில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட நடைபயண பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும், மாவட்டத் தலைவர்கள் கூட்டம் திட்டமிட்டபடி நாளை அதாவது அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் உற்ற நண்பனாக மண் வளத்தை காக்க பெரும் பங்கு வகிக்கும் அசோலா 
விவசாயிகளின் உற்ற நண்பனாக மண் வளத்தை காக்க பெரும் பங்கு வகிக்கும் அசோலா 
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
அம்மனை நாடி அலைகடலென திரண்ட பக்தர்கள்! ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
அம்மனை நாடி அலைகடலென திரண்ட பக்தர்கள்! ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Embed widget