TN Assembly :கோட்டையை தக்கவைப்பாரா விஜய்? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: வரலாற்றில் முதல்முறையாக நேரடி ஒளிபரப்பு
ஒரு அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு (Floor Test) நிகழ்வு முழுமையாக நேரலையில் ஒளிபரப்பப்படுவது இதுவே முதல்முறை என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகள் அனைத்தும் முதல்முறையாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.
நம்பிக்கை வாக்கெடுப்பு:
தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலில், இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், ஆளுநர் அரசியல் சாசன விதிகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார். தேவைப்பட்டால் சட்டமன்றத்தைக் கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்யவும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. இதனால் தமிழகமே இன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கித் திரும்பியுள்ளது.
நேரலை ஒளிபரப்பு
வழக்கமாக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கேள்வி நேரம் மற்றும் சில முக்கிய நிகழ்வுகள் மட்டுமே நேரலையில் ஒளிபரப்பப்படும். ஆனால், ஒரு அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு (Floor Test) நிகழ்வு முழுமையாக நேரலையில் ஒளிபரப்பப்படுவது இதுவே முதல்முறை என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டப்பேரவை நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பின்னணி என்ன?
கடந்த சில தினங்களாக நீடித்து வந்த அரசியல் நகர்வுகளுக்கு இடையே, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சரை மே 13-ம் தேதிக்குள் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு (Vote of Confidence) அறிவுறுத்தியிருந்தார்.
இன்றைய வாக்கெடுப்பு ஏன் முக்கியம்?
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தனது 120 உறுப்பினர்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்கிறாரா அல்லது அரசியல் கணக்குகளில் ஏதேனும் மாற்றம் நிகழுமா என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
விதிமுறைகள் சொல்வது என்ன?
"அரசு பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், ஆளுநர் உடனடியாக ஆட்சியைக் கலைக்கவோ அல்லது மாற்று அரசாங்கம் அமைக்க வாய்ப்புள்ளதா என ஆய்வு செய்யவோ முடியும். இறுதியாக, மாநிலத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைக்க வாய்ப்பு அதிகம்."
தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக இது காட்சி நேரலையில் ஒளிபரப்பப்படுவதால், மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
பரபரப்பான அரசியல் சூழல்
ஆளுநர் நிர்ணயித்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சிகள் தங்கள் பலத்தை நிரூபிக்கத் தயாராகி வருகின்றன. இந்த நேரலை ஒளிபரப்பு முடிவால், பேரவைக்குள் நடக்கும் விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்பு முறைகளை மக்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்






















