வெள்ளரிக்காயில் ஏராளமான நீ்ர்ச்சத்து உள்ளது.
கோடை காலத்தில் வெயில் உடலை வதைக்காமல் இருப்பதற்கு வெள்ளரிக்காய் மிகவும் சிறந்த தீர்வாக உள்ளது.
வெள்ளரிக்காய் சாப்பிடுவதன் மூலம் கோடை காலத்தில் நீரேற்றம் உடலில் நீடிக்கிறது.
வெள்ளரிக்காயில் ஏராளமான வைட்டமின்கள், ஊட்டச்சத்துகள் இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது ஆகும்.
வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின் கே எலும்பை வலுவாக்கும் ஆற்றல் கொண்டது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் சருமத்தை பளபளப்பாக வைப்பதில் வெள்ளரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின் ஏ பார்வைக்கு மிகவும் நல்லது ஆகும்.
பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது. இது செரிமானத்திற்கு பக்கபலமாக உள்ளது.
வெள்ளரிக்காய் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
எடையை குறைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.