Anbil Mahesh Speech: அரசு பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியிருக்கிறார்.
பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் அன்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் பேசியதாவது, “அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச, படிக்க, எழுத, புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த, ரூ.30 கோடி மதிப்பீட்டில், 6029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும்"என பேசியிருக்கிறார்.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தை இன்னும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டிய தேவை உள்ளது.
150 கோடி மதிப்பீட்டில் 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.
2813 நடுநிலை பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச, படிக்க, எழுத, புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த, ரூ.30 கோடி மதிப்பீட்டில், 6029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
View this post on Instagram
அனைத்து அரசு பள்ளிகளில் 150 கோடி மதிப்பீட்டில் 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.
பள்ளி பராமரிப்புக்கென 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1000 மாணவர்கள் மேல் கொண்ட அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் அனைத்து வசதிகளை உள்ளடக்கிய கட்டமைப்பு 90 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
100 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பள்ளிகளும், சாதனையாளர்கள் படித்த பள்ளிகளும் அதன் தனிச்சிறப்பு மாறாமல் இருக்க, 25 கோடி மதிப்பீட்டில் அவை புதுப்பிக்கப்பட்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்.
சிறந்த தலைமையாசிருக்கு அண்ணா அறிஞர் தலைமைத்துவ விருது வழங்கப்படும்.
அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுடன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
25 கோடி மதிப்பீட்டில் நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
சிறந்து விளங்கும் மாணவர்களை தேசிய மற்றும் உலக அளவில் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
கோடை காலத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் மாணவர்களுக்கு மலைசார்ந்த சுற்றுலாதளங்களில் சிறப்பு பயிற்சிகள் அமைக்கப்படும், என்றார்.