Traffic Diversion: கார்த்திகை தீபம் திருவண்ணாமலைக்கு செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றம்! மாற்று வழிகள் இதோ!
Karthigai Deepam 2025: "திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வாகனங்களுக்கான மாற்றுப் பாதை அறிவிப்பை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது"

Karthigai Deepam Tiruvannamalai Traffic Diversion: திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை வர உள்ளனர். ஆகையால் வளி மாவட்டங்களில் இருந்து வழக்கமாக திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள் (HMV - லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள்) மற்றும் இலகுரக வாகனங்கள் (LMV - கார்,வேன் உள்ளிட்ட வாகனங்கள்) 02.12.2025 காலை 08.00 மணி முதல் 05.12.2025 காலை 06.00 மணி வரை திருவண்ணாமலை வழியாக வந்து வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாற்றப் பாதைகளில் செல்வதற்கான கீழ் காணும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பெங்களூரு, கிருஷ்ணகிரி,திருப்பத்தூர் --- விழுப்புரம், கடலூர், புதுச்சேரி
பெங்களூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழித்தடங்களில் இருந்து விழுப்புரம், கடலூர்,புதுச்சேரி, திண்டிவனம் மார்க்கமாக வெல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான பர்கூர் – வாணியம்பாடி – வேலூர் – ஆற்காடு – வெய்யாறு - வந்தவாசி வழியாக செல்லலாம்.
மேற்படி வாகனங்கள் ஊத்தங்கரை, வெங்கம், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
விழுப்புரம், கடலூர், புதுச்சேரி --- பெங்களூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்
விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் வழித்தடங்களிலிருந்து கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வபங்களூரு மார்க்கமாக வெல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாலையான வந்தவாசி – வெய்யாறு – ஆற்காடு – வேலூர் – வாணியம்பாடி –பர்கூர் வழியாக வெல்லவும்.
மேற்படி வாகனங்கள் வேட்டவலம் / செஞ்சி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை. வழியாக செல்ல அனுமதி இல்லை.
திருப்பதி, கே.ஜி.எப், வேலூர் ---- திண்டிவனம், விழுப்புரம், கடலூர், திருச்சி
திருப்பதி, கே.ஜி.எப், வேலூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இருந்து திண்டிவனம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் திருச்சி மார்க்கமாக வெல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாலையான வேலூர் – ஆற்காடு – செய்யாறு –வந்தவாசி வழியாக செல்ல அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி வாகனங்கள் கண்ணமங்கலம், போளூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
திண்டிவனம், விழுப்புரம் கடலூர், திருச்சி ---திருப்பதி, கேஜிஎஃப் , வேலூர்
திண்டிவனம், விழுப்புரம், கடலூர், திருச்சி, புதுச்சேரி, வழித்தடங்களில் இருந்து திருப்பதி, கே.ஜி.எப், வேலூர் மார்க்கமாக வெல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாலையான வந்தவாசி - செய்யார் - ஆற்காடு – வேலூர் வழியாக செல்லவும்.
மேற்படி வாகனங்கள் வேட்டவலம் / செஞ்சி, கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
பெங்களூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் --- விருதாச்சலம், சிதம்பரம், நாகப்பட்டினம்
பெங்களூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழித்தடங்களிலிருந்து விருதாச்சலம், சிதம்பரம், நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்று பாதையான தர்மபுரி – தோப்பூர் – சேலம்;-வாழப்பாடி – ஆத்தூர் வழியாக செல்ல அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி வாகனங்கள் ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக செல்ல அனுமதி இல்லை.
விருதாச்சலம், சிதம்பரம், நாகப்பட்டினம் --- பெங்களூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்
விருதாச்சலம், சிதம்பரம், நாகப்பட்டினம், உள்ளிட்ட வழித்தடங்களிலிருந்து பெங்களூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மார்க்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாலையான உளுந்தூர்பேட்டை, ஆத்தூர் – வாழப்பாடி – சேலம் – தொப்பூர்- தர்மபுரி வழியாக செல்ல அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி வாகனங்கள் திருக்கோவிலூர், மணலூர்பேட்டை, சங்கராபுரம்,ஸதிருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை என திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது





















