" ஒன்னும் ஆகாது " பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி அலுவலக உதவியாளர்
பள்ளிக்குச் சென்ற சிறுமியை கர்பமாக்கிய தனியார் பள்ளி உதவியாளர் போக்சோ சட்டத்தில் கைது

" ஒன்னும் ஆகாது " என மாணவிக்கு பாலியல் சீண்டல்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருபவர் முகமது பாட்ஷா ( வயது 32) இவருக்கு திருமணம் முடிந்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பள்ளியில் 12 - ம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
அவ்வப்போது அந்த மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் வந்துள்ளார். இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதெல்லாம் ஒன்னும் ஆகாது என மாணவியை சமாதானப்படுத்தி மீண்டும் அதே போல் பழகி வந்துள்ளார்.
மருத்துவமனையில் சோதனை - அதிர்ச்சியடைந்த பெற்றோர்
இதனையடுத்து திடீரென அந்த மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர். அதில் அந்த மாணவி கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது.
இது குறித்து மகளிடம் விசாரித்த போது பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வரும் முகமது பாட்ஷா குறித்து கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்துள்ளனர்.
புகாரை அடுத்து அலுவலக உதவியாளர் முகமது பாட்ஷாவை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். மேலும் அவர் மீது குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைத்தனர். பள்ளியில் படிக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் ஊத்துக்குளி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Before You Go
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
ட்ரெண்டிங் செய்திகள்






















