மேலும் அறிய

திருப்பத்தூரில் பரபரப்பு.. சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரி தர்ணா! நெஞ்சு வலியால் சரிந்த சோகம்!

பணியிடை நீக்க நடவடிக்கையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரமேஷிற்கு ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

திருப்பத்தூர் மின்சார வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த நிர்வாக மேற்பார்வையாளர் ரமேஷ் என்பவர், தன் மீதான பணியிடை நீக்க நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டபோது திடீரென நெஞ்சுவலியால் சரிந்து விழுந்தார்.

சக அதிகாரிகளின் மெத்தனத்தால் தான் பழிவாங்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டிய நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாக ரீதியான மோதல்

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (46), திருப்பத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் நிர்வாக மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களை ஆய்விற்காகத் தன் உயர் அதிகாரிகளான சதீஷ் மற்றும் பொறியாளர் ஜெயின் உல்லா புதின் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அந்த மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், ரமேஷ் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மன உளைச்சலுக்கு ஆளானர்

பணியிடை நீக்க நடவடிக்கையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரமேஷிற்கு ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை பெற்று வந்துள்ளார். தன் மீது தவறு இல்லாத நிலையில் தண்டனை வழங்கப்பட்டதை எண்ணி அவர் வேதனையில் இருந்துள்ளார்.

தர்ணா போராட்டம்

இன்று அலுவலகத்திற்குச் சென்ற ரமேஷ், "மனுக்களை உயர் அதிகாரிகளாகிய உங்களுக்கு அனுப்பியது எனது கடமை, அதன் மீது நடவடிக்கை எடுக்காதது உங்கள் தவறு. என்னை ஏன் சஸ்பெண்ட் செய்தீர்கள்?" என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரிகளிடமிருந்து முறையான பதில் கிடைக்காததால், அலுவலகத்தின் நுழைவாயில் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

போலீசார் மீட்பு

போராட்டத்தின் போது திடீரென ரமேஷிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்து கதறி அழுதார். உடனடியாகத் தனது நண்பர் ஆறுமுகத்திற்குத் தகவல் தெரிவித்து மாத்திரைகளை எடுத்து வரச் சொன்னார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் நகர போலீசார், ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget