மேலும் அறிய

திருநெல்வேலி–சென்னை சிறப்பு ரயில் சேவை தொடக்கம் – எந்த நாட்களில் இயக்கம்? விபரம் இதோ!

அதிவேக சிறப்பு ரயில் ஏப்ரல் 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது.  குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.


திருநெல்வேலி–சென்னை சிறப்பு ரயில் சேவை தொடக்கம் – எந்த நாட்களில் இயக்கம்? விபரம் இதோ!

இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.  குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். ரயில் செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக விடுமுறை தினங்கள், திருவிழாக்கால நேரங்களில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த நிலையில், கோடை விடுமுறையையொட்டி சென்னை – திருநெல்வேலி இடையே கூட்ட நெரிசலை குறைக்க தெற்கு ரயில்வே இரண்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் குறிப்பிட்ட தேதிகளில் இயக்கப்படும் இந்த ரயில்கள் பல முக்கிய நிலையங்களில் நின்று சேவை வழங்கும். கோடை விடுமுறையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கில், சென்னை மற்றும் திருநெல்வேலி இடையே இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் ஏப்ரல் 16 இன்று முதல் ஏப்ரல் 30 வரை இயக்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிவேக சிறப்பு ரயில் ஏப்ரல் 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். மீண்டும், ஏப்ரல் 17, 24 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரிலிருந்து மதியம் 1.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1.00 மணிக்கு திருநெல்வேலியை அடையும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி சந்திப்பு, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். மற்றொரு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ஏப்ரல் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.35 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.


திருநெல்வேலி–சென்னை சிறப்பு ரயில் சேவை தொடக்கம் – எந்த நாட்களில் இயக்கம்? விபரம் இதோ!

மீண்டும், ஏப்ரல்  20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து மதியம் 1.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.00 மணிக்கு திருநெல்வேலியை அடையும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். கோடை விடுமுறையின்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் தேவையை பூர்த்தி செய்து, கூட்ட நெரிசலை குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

தலைப்பு செய்திகள்

டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget