மேலும் அறிய

தொடர்ந்து 3 ஆண்டுகளாக பட்ஜெட்டில் வெளியாகும் திண்டிவனம் உணவு பூங்கா.... ஏட்ல இருக்கு நாட்ல இல்ல...!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பொல்லாக்குப்பத்தில் உணவு பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தொடர்ந்து 3 ஆண்டுகளாக பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

சட்டப்பேரவையில் இன்றைய தினம் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெலாக்குப்பத்தில் 450 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய உணவு பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்படும் என்றும், 3 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் கூறியிருந்தார். மேலும் தொழில் வளர்ச்சிக்காக பின் தங்கியுள்ள மாவட்டங்களான திருவண்ணாமலை, தருமபுரி, நாமக்கல், விழுப்புரம், நெல்லை, விருதுநகர், சிவகங்கை, தேனி, நாகையில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

TN Budget 2021 Live Updates: புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.1725 கோடி ஒதுக்கீடு; பட்ஜெட்டில் அறிவிப்பு!

2018ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் வெளியான உணவு பதப்படுத்தும் பூங்கா :

கடந்த அதிமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் 2018-19ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோதும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பெளகுப்பத்தில் உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்துடன் இணைந்து நபார்டு வங்கியின் உதவியோடு  450 ஏக்கர் பரப்பளவில், ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

மேலும் கடந்த 2019ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளகுறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உதயமானது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திண்டிவனத்தில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் உணவு பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் இன்று வெளியான தமிழக அரசு பட்ஜெட்டில் திண்டிவனத்தில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய உணவு படுத்துக்கொள்ளும் பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக அறிவிப்பாக இருந்த திண்டிவனம் உணவு பதப்படுத்தும் பூங்காவானது நடப்பு பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் இதுவரி எந்த பணிகளும் முறையாக நடைபெறாமலேயே உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அரசின் ஏட்டில் உள்ள அறிவிப்புகள் நடைமுறைக்கு வர பல ஆண்டுகள் ஆகும் என்பதற்கு உதாரணமாக உணவுப்பூங்கா குறித்த அறிவிப்பு உள்ளதாக கூறும் பொதுமக்கள், இந்த அரசாவது அதனை நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 

TN Budget 2021 Live Updates: புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.1725 கோடி ஒதுக்கீடு; பட்ஜெட்டில் அறிவிப்பு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
PM Modi - Rajinikanth: ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
PM Modi - Rajinikanth: ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
October 2: தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2
தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2
வேண்டும் வரங்களைத் தந்து பக்தர்களை காக்கும் கூத்தூர் தர்மசாஸ்தா கோயில்.. சிறப்புகள் என்ன?
வேண்டும் வரங்களைத் தந்து பக்தர்களை காக்கும் கூத்தூர் தர்மசாஸ்தா கோயில்.. சிறப்புகள் என்ன?
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
Embed widget