மேலும் அறிய

கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER

கட்சியில் ஜூனியராக இருக்கும் போதிலும், அதிகாரமிக்க துணை முதலமைச்சர் பதவியை கொண்டுள்ள உதயநிதி தலைமையில் நடக்க உள்ள ஆய்வு கூட்டத்தில் கனிமொழி கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக துணை முதல்வர் உதயநிதி கலந்து கொள்ளும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்குமாறு தூத்துக்குடி எம்.பி. கனிமொழிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் அரசியல் வருகையால் தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. கடந்த இரண்டு வாராங்களாக ஒட்டுமொத்த கவனமும் தவெக மீது இருந்த நிலையில், தற்போது அது திமுக பக்கம் மீண்டும் திரும்பியுள்ளது. தூத்துக்குடிக்கு பறந்த கடிதம் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி செல்லும் உதயநிதி:

வரும் 14ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி செல்ல உள்ளார். மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்வதற்காக அவர் செல்ல உள்ளார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பி ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என அரசின் செயலாளர் டேரஸ் அகமது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது, உதயநிதி தலைமையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்து கொள்ள இருக்கிறார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் என்ற அடையாளத்தையும் தாண்டி, கொள்கைகளில் தீவிரமாக இருப்பவர், கட்சியனர் மற்றும் பொது மக்களை எளிதில் அணுகக்கூடியவர் என்ற இமேஜை கொண்டிருப்பவர் கனிமொழி.

திமுகவில் சலசலப்பு:

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே, கனிமொழி ஓரங்கட்டப்படுவதாக திமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. கருணாநிதியின் அரசியல் வாரிசாக கனிமொழி கருதப்பட்டாலும், கட்சியிலும் ஆட்சியிலும் அவருக்கான முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என அவரது ஆதரவாளர்கள் குமுறி வருகின்றனர்.

கருணாநிதி காலத்தில் திமுகவின் டெல்லி முகமாக முரசொலி மாறன் இருந்தது போல், ஸ்டாலின் முதலமைச்சரான நிலையில், திமுகவின் டெல்லி முகமாக கனிமொழி உருவெடுத்தபோதிலும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இல்லாத காரணத்தால் அதிகாரம் இன்றி இருக்கிறார் கனிமொழி.

அதேபோல, கட்சியிலும் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். எனவே, அவர் மாநில அரசியலுக்கு திரும்ப வேண்டும் என்பது அவரது ஆதரவாளர்களின் கோரிக்கையாக உள்ளது. சமீபத்தில், மாநில அரசியலுக்கு வருவது குறித்து கனிமொழியே பதில் அளித்திருந்தார்.

தான் மாநில அரசியலுக்கு வருவது குறித்து கட்சியும், முதலமைச்சரும் முடிவு செய்வார்கள் என கூறியிருந்தார். இந்த நிலையில், கட்சியில் ஜூனியராக இருக்கும் போதிலும், அதிகாரமிக்க துணை முதலமைச்சர் பதவியை கொண்டுள்ள உதயநிதி தலைமையில் நடக்க உள்ள ஆய்வு கூட்டத்தில் கனிமொழி கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்குலாப் ஜிந்தாபாத்" 7ஆவது மாடியில் இருந்து குதித்த நபர்.. தலைமை செயலகத்தில் பரபரப்பு!
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
AUS vs PAK: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
AUS vs PAK: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்குலாப் ஜிந்தாபாத்" 7ஆவது மாடியில் இருந்து குதித்த நபர்.. தலைமை செயலகத்தில் பரபரப்பு!
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
AUS vs PAK: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
AUS vs PAK: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
AUS vs SA: மழை வந்தா என்ன? ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க போட்டியில் ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!
AUS vs SA: மழை வந்தா என்ன? ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க போட்டியில் ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
Embed widget