மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளை திறக்கும் நேரத்தில் மாற்றமில்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, “டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும். இரவு 10 மணிக்கு மூடப்படும். டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்க்க உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மது குடிப்போர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். 90ml பாட்டில் விற்பனை செய்வது தொடர்பாக அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது”. என்றார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்”
வீட்டு வசதித்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்துள்ளோம். 15 இடத்தை தேர்ந்தெடுத்து முன்மாதிரி கட்டடங்களை கட்ட ஏற்பாடு செய்யப்படுகிறது. அனைத்து வசதிகள், பூங்காக்களுடன் கட்டடம் அமைக்கப்படும்.10 ஆயிரம் வீடுகள் மிக மோசமாக பழுந்தடைந்து விட்டது. 60 இடங்களில் வீடுகளை இடிக்க பொதுப்பணித்துறையிடம் அனுமதி பெற்று சில இடங்களில் இடிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் புதிய குடியிருப்புகளை கட்ட உள்ளோம். பத்திரிக்கையாளர்கள் கேட்டால் வீடு வழங்க தயாராக உள்ளோம். சில கட்டிடங்கள் பல காரணத்திற்காக விற்கப்படாமல் உள்ளது. அதையும் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளின் நேரம் மாற்றம் செய்யப்படாது. டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு இருக்கும் பிரச்சனை சாதாரணமானது அல்ல. அதை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெட்ரா பேக் குறித்து அனைத்து கருத்துகளையும் கேட்டு வருகிறோம். இது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை. பள்ளி கல்லூரிகள் கோவில்களுக்கு அருகில் இருக்கக்கூடிய கடைகளை கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதையும் கண்காணித்து மூட உள்ளோம். 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது சில இடங்களில் நடந்திருப்பது பெரியதாக்கப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் நடக்கிறது ஆனால். அனைத்து இடங்களிலும் நடப்பது உண்மை அல்ல. அதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் அவர்களுடைய அனைத்து பிரச்சனைகளையும் எழுதி கொடுத்துள்ளனர்.தனியார் கட்டடத்திற்கு இணையாக 100 ஆண்டுகள் நீடிக்கும் வகையில் கட்டடம் கட்டப்பட உள்ளது. ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம் விரைவில் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதிதாக மது வாங்க வருபவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். அனைத்து மதுபான கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு சென்னையிலிருந்தும் அந்தந்த காவல் நிலையத்திலிருந்தும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக மாற்றப்படும் மதுபான கடைகள் 500 சதுர அடிக்கு இருக்க வேண்டும், கழிப்பறையும் இருக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.தகுந்த இடங்கள் இருக்கும் மதுபான கடைகளில் பில்லிங் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.